கருப்பின போராளியை கொல்ல முயன்ற மேலும் ஒருவர் மீது வழக்குப்பதிவு

இங்கிலாந்தில் இனவெறிக்கு எதிராக போராடிவரும் 27 வயது சாஷா ஜான்சன் மீது கடந்த மே 23ஆம் தேதி ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டதில், அவரது தலையில் குண்டுபாய்ந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைதாகி, ஜூன் மாதம் வரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கேமரூன் டெர்ரிக் என்ற 18 வயது இளைஞர் மீது தற்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை அவர் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

Add your comment

Your email address will not be published.

7 − 1 =