முடிவுக்கு வந்தது இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்

 

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வரவேற்பு

 

கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல் வெள்ளிக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் வாயிலாக முடிவுக்கு வந்தது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

 

ஜெருசலேமின் கிழக்குப் பகுதி யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் புனித நகரமாக கருதப்படுகிறது. இந்தநிலையில், இதற்கு யூதர்களும், இஸ்லாமியர்களும் உரிமை கொண்டாடி வருவதால், இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே கடந்த மே 10ஆம் தேதி மோதல் வெடித்தது. அதிகாரபூர்வ போராக இது வெடிக்காவிட்டாலும், இருநாடுகளும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இஸ்ரேலை கண்டித்து பாலஸ்தீனியர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இஸ்ரேலுக்கு எதிராக தங்களது கரங்கள் துப்பாக்கியின் டிரிக்கரை அழுத்திக் கொண்டிருப்பதாக காஸô அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

குறிப்பாக கடந்த வியாழக்கிழமை காஸா உள்கட்டமைப்பு நிலைகளை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது. பதிலுக்கு இஸ்ரேலும் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதனால், இருதரப்பிலும் பெருமளவில் பொருள் சேதம் ஏற்பட்டது. ஏறத்தாழ 11 நாள்களாக நீடித்த இந்த மோதலில், காஸாவில் 100 பெண்கள், குழந்தைகள் உள்பட 232 பேர் கொல்லப்பட்டதாக அதன் சுகாதாரத் துறை அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

மறுமுனையில் இஸ்ரேலில் 2 குழந்தைகள் உள்பட 12 பேர் பலியானதாகவும், காஸôவை நோக்கி இஸ்ரேல் தரப்பில் சுமார் 4 ஆயிரம் ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. உலகையே உலுக்கிய இந்த மோதல், போர்நிறுத்த ஒப்பந்தம் வாயிலாக வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதற்கு வரவேற்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இருநாடுகளும் வளர்ச்சியை நோக்கி முன்னேற போர் நிறுத்தம் நேர்மையான வாய்ப்பை அளித்திருப்பதாக குறிப்பிட்டார்.

Add your comment

Your email address will not be published.

ten + seventeen =