Category: World News

செய்தி நிறுவனங்களுடன் இணைகிறது டுவிட்டர்

டுவிட்டரில் பரவும் பொய்யான தகவலால் சமூகத்தில் பல்வேறு அவலங்கள் ஏற்படுவதை நாள்தோறும் காண முடிகிறது. இதன் காரணமாக உலகின் நம்பகமாக செய்தி நிறுவனங்களான ராய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து அதிகாரபூர்வ செய்திகளை பரப்பும் நோக்கில், அந்நிறுவனங்களுடன் டுவிட்டர் கைகோர்த்துள்ளது.

Read More

ஹாலிவுட் காமெடி நடிகைக்கு அறுவை சிகிச்சை

பிரபல ஹாலிவுட் காமெடி நடிகை கேத்தி கிரி”ஃ”ப்னுக்கு அண்மையில் நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இடதுபக்க நுரையீரலில் ஒரு பகுதி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர், 60 வயது நடிகை கேத்தி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Read More

வூஹானில் மீண்டும் தலையெடுக்கும் கரோனா

சீனாவில் கரோனா வைரசின் தோற்றுவாயான வூஹானில் தற்போது டெல்டா தொற்றின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நாளொன்றுக்கு 30 பேர் வீதம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, 1 கோடியே 10 லட்சம் பேரை கொண்ட வூஹான் நகரில், ஒவ்வொருவருக்கும் கரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

பயிற்சியாளரை விமர்சித்த தடகள வீராங்கனை வெளியேற்றம்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விசாரணை ஒலிம்பிக்கில் பங்கேற்றுவரும் பெலாரஸ் தடகள வீராங்கனை 24 வயது கிறிஸ்டியனா, பயிற்சியாளரை விமர்சித்ததற்காக போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஜப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாளை பெலாரஸ் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Read More

கடல்கடந்தும் பாரம்பரியத்தை நிலைநாட்டும் இந்துக்கள்!

  பிரிட்டனின் ஒரு பகுதியான வேல்ஸ் மாகாணத்தில் இந்துக்களும், சீக்கியர்களும் 3 தலைமுறைகளாக வாழ்கின்றனர். உலகின் தொன்மைவாய்ந்த சமயமான இந்து மதத்திலும், சீக்கிய மதத்திலும் இறந்தவர்களின் உடலை எரியூட்டுவது வழக்கம். “திரைகடல் ஓடி திரவியம் தேடு’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, கடல்கடந்து வெளிநாடுகளில் குடியேறினாலும், தங்கள் பாரம்பரிய கலாசாரத்தையும், மண்வாசனையையும் கைவிடாத இவ்விரு சமயத்தினரும், இறந்தவர்களின் அஸ்தியை கரைப்பதற்கு தென் வேல்ஸின் கார்டிஃப் பகுதியில், தாஃப் நதிக்கரையில் அரசு சார்பில் இடம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்தியாவில் இறந்தவர்களின் […]

Read More

பிரிட்டனில் புதிய தளர்வுகள்

ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், மஞ்சள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இருந்து பிரிட்டன் வரும்பட்சத்தில், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. இந்த தளர்வுகள் இன்று காலை 4 மணிமுதல் அமலுக்கு வந்தன.

Read More

பெலாரஸ் தடகள வீராங்கனை வெளியேற்றம்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பெலாரஸ் நாட்டின் 24 வயது தடகள வீராங்கனை கிறிஸ்டியனா, பயிற்சியாளரை விமர்சித்த குற்றத்துக்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஜப்பானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், டோக்கியோவின் ஹனீடா விமான நிலைய ஹோட்டலில் இரவுப் பொழுதை கழித்த அவர், விமானத்தில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

பிரான்சில் இரட்டைக் குட்டி போட்ட பாண்டா

பொதுவாக பாண்டா கரடிகள் ஒரு குட்டியை மட்டுமே ஈனுவது வழக்கம். இந்த நிலையில், பிரான்சில் சூபார்க் டி பீவெல் என்ற விலங்குகள் சரணாலயத்தில், ராட்சத பாண்டா ஒன்று இரட்டைக் குட்டியை போட்டு அசத்தியது. தலா 149 கிராம், 129 கிராம் எடைகொண்ட அந்த பாண்டா குட்டிகள், இளஞ்சிவப்பு நிறத்தில் குண்டாக இருப்பதாக சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

ஒலிம்பிக் கிராமத்தில் விதிகளை மீறிய வீரர்கள்

  ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில், தடகள வீரர்களும், அணிகளின் பயிற்சியாளர்களும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஓரிடத்தில் கூடி மது விருந்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கரோனா தடுப்பு விதிகளை காற்றில் பறக்கவிட்டு மிகவும் நெருக்கமாக நின்றுகொண்டு கூத்தடித்தனர். இதன் காரணமாக ஒலிம்பிக் கிராமத்தில் அடுத்த அலை எழுந்துவிடலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

Read More

ஈரான் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

இஸ்ரேலுக்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் கப்பல் அரபிக் கடலில் ஓமன் கடற்கரை அருகே சென்றபோது அதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், பிரிட்டிஷ், ரோம் நாட்டைச் சேர்ந்த இருவர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

Read More

தி கிரவுண் சீரியஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பிரிட்டனில் பெரும் வரவேற்பை பெற்ற தி கிரவுண் சீரியஸின் 5ஆம் பாகம் விரைவில் நெட்”ஃ”பிளிக்ஸில் திரையிடப்படவுள்ள நிலையில், அதில் இளவரசியாக நடிக்கும் இமெல்டா ஸ்டான்டனின் “ஃ”பர்ஸ்ட் லுக் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

ஹாங்காங்கில் கருத்து சுதந்திரத்துக்கு இடமில்லை

சீனாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஹாங்காங்கில், விடுதலை கோரி பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக சமீபத்தில் ஒருவர் தேச பாதுகாப்பு சட்டத்தில் 9 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், ஹாங்காங்கில் கருத்து சுதந்திரம் அற்றுப்போய்விட்டதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Read More

டிரம்பின் வருமான வரி விவரங்களை பொது அவையில் வெளியிடுக

வருவாய்த்துறைக்கு நீதித்துறை உத்தரவு அமெரிக்காவில் சட்டவிதிகள் இல்லாவிட்டாலும், கடந்த 1976ஆம் ஆண்டு முதல் அதிபர்கள் தங்கள் வருமான வரி தாக்கல் விவரங்களை பொதுவெளியில் அறிவிப்பது வழக்கம். இதை முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டும் பின்பற்ற மறுப்பு தெரிவித்துவிட்டார். எனவே, டிரம்ப் தனது பதவிக்காலத்தில் செலுத்திய வருமான வரி விவரங்களை, இரு அவைகளும் அங்கம் வகிக்கும் அமெரிக்க ஐக்கிய பேரவையில் பகிர வேண்டுமென வருவாய் சேவைகள் துறைக்கு நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து டிரம்ப் நீதிமன்றத்தை நாடுவார் […]

Read More

தடுப்பூசியிலும் தேசபக்தி கென்ய பிரதமர் வேதனை

வளர்ந்த நாடுகள் தேசபக்தி என்ற பெயரில் உபரி தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு விநியோகிக்க மறுப்பதாகவும், இதனாலேயே ஆப்பிரிக்காவில் இருடோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகவும் கென்ய நாட்டின் அதிபர் உஹுரு கென்யட்டா வேதனை தெரிவித்தார். லண்டனில் இங்கிலாந்தும், கென்யாவும் 3 நாள்கள் நடத்திய கல்வி மாநாட்டின் ஓர் அங்கமாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார்.

Read More

கரடியை துன்புறுத்திய பெண் சிக்கினார்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் சமந்தா டேரிங். இவர் கடந்த 2017ஆம் ஆண்டில் யெல்லோஸ்டோன் பார்க்கில், நாயை துரத்திவந்த கரடியை துன்புறுத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Read More

பிரான்சில் கியூபா தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள கியூபா தூதரகத்தில் சமீபத்தில் இரவுநேரத்தில் மர்மநபர்கள் 2 பேர், மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த சம்பவத்துக்கு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. இதற்கு காரணமானவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Read More

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் ஊரடங்கு

ஆஸ்திரேலியாவில் சிட்னியை தொடர்ந்து பிரிஸ்பேன் நகரிலும் டெல்டா தொற்று பரவல் அதிகரித்ததால், அங்கு இன்றுமுதல் (சனிக்கிழமை) 3 நாள்களுக்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 சதவீதத்துக்கும் குறைவான நபர்களே தடுப்பூசி செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நோ ஜேப், நோ ஜாப் (No jab, No job) திட்டத்தை எதிர்த்து வழக்கு

வழக்கறிஞர்கள் முடிவு பிரிட்டனில் பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் இருடோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால், அவர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்திருக்கின்றன. நோ ஜேப், நோ ஜாப் (No jab, No job) என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு பிரிட்டன் போக்குவரத்து துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் வரவேற்பு அளித்தாலும், இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற இயலாது என தெரிவித்துவிட்டார். இந்நிலையில், கார்பரேட் நிறுவனங்களின் நிலைப்பாட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வழக்கறிஞர்கள் […]

Read More

ஸ்பெயின், இத்தாலி செல்ல தடை

ஸ்பெயின், இத்தாலி நாடுகளை அடுத்த வாரம் மஞ்சள் பட்டியலில் இணைத்து, அங்கிருந்து வருபவர்களை குவாரண்டைனில் அடைக்க பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. இதற்காக அவர்களிடம் இருந்து 1,750 பவுண்ட் கட்டணம் வசூலிக்கப்படலாம். பிரிட்டன் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை இத்தாலி கடுமையாக்கியதாலும், புதிய விதிமுறைகளை கிரீஸ் வகுத்து வருவதாலும், இந்த முடிவை பிரிட்டன் மேற்கொள்கிறது.

Read More

டாப் 10 நியூஸ்

வேல்ஸ் மாகாணத்தில் இருடோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தால், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. இந்த உத்தரவு வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதே உத்தரவு இங்கிலாந்திலும் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது. ஆனாலும், வேல்ஸ் மாகாணத்தை பின்பற்றி, இங்கிலாந்தில் இந்த உத்தரவை முன்கூட்டியே நடைமுறைப்படுத்த வேண்டுமென லேபர் கட்சி வலியுறுத்தியது. அதேவேளையில், இங்கிலாந்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி தான் இந்த உத்தரவு நடைமுறைக்கு […]

Read More

அமேசான் நிறுவனத்துக்கு 886 மில்லியன் டாலர் அபராதம்

ஐரோப்பிய யூனியன் தரவு பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக அமேசான் நிறுவனத்துக்கு 886.6 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லக்சம்பர்க் தேசிய கவுன்சில் இந்த அபராதத்தை விதித்தது. எனினும், விதிமீறல் குற்றச்சாட்டை மறுத்த அமேசான் நிறுவனம், இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப் போவதாக அறிவித்தது.

Read More

சோழர்கால சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா

  “சோழநாடு சோறுடைத்து‘ என்பர். இதன் பொருள் சோழ நாட்டு மக்கள் செல்வசெழிப்பில் திளைத்தவர்கள் மட்டுமல்ல, தங்களை நம்பி வந்தவர்களுக்கும் அன்னம்பாலித்து அவர்களை இன்முகத்தோடு உபசரித்தனர் என்பதே ஆகும். இத்தகைய தன்மைவாய்ந்த சோழ தேசத்து மக்கள், தாராள குணத்தில் மட்டுமன்றி, கட்டிடக் கலையிலும் தலைசிறந்து விளங்குகின்றனர். இதற்கு உதாரணமாக இன்றைக்கு சோழவள நாட்டில் காணப்படும் ஆலயங்களையும், புடைப்புச் சிற்பங்களையும் செப்பலாம். சிறப்புகள் வாய்ந்த சோழர் காலத்தில் செய்யப்பட்ட திருஞானசம்பந்தரின் சிலை உள்பட 14 அரியவகை கலைபொருள்கள், இல்லை… […]

Read More

ராணுவத்தைக் களமிறக்கிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இதுவரை 3 ஆயிரம் பேர் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் பலியாகினர். அங்கு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் பொருட்டு நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். வரும் திங்கள்கிழமை முதல் அவர்கள் சோதனையில் ஈடுபடுகின்றனர்.

Read More

தடுப்பூசி செலுத்தினால் 100 டாலர் ஊக்கத்தொகை

ஜோபிடன் தாராளம் அமெரிக்க மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர். இந்நிலையில், ஒருசில இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவதால், இனி தடுப்பூசி செலுத்த முன்வருபவர்களுக்கு தலா 100 டாலர் ஊக்கத்தொகை அளிக்குமாறு மாகாண அரசுகளுக்கு அதிபர் ஜோபிடன் அறிவுறுத்தினார்.

Read More

ரஷ்ய செயற்கைக்கோளில் தீ விபத்து

சர்வதேச விண்வெளி மையத்தில் பரபரப்பு நாக்கா என்ற செயற்கைக்கோளை கடந்த வாரம் ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பியது. 8 நாள் பயணத்துக்குப் பின் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த அந்த செயற்கைக்கோளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்வெளி மையம், நிலைகுலைந்தது. அதை அமெரிக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் பல மணிநேர போராட்டத்துக்குப் பின் சரிசெய்தனர். இந்தத் தீ விபத்து காரணமாக சர்வதேச விண்வெளி மையத்தில் முகாமிட்டுள்ள 7 பேரின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என […]

Read More

உலகம் முழுவதும் 130 கோடி சிறுமிகள் பள்ளிப் படிப்பை கைவிட்டுவிட்டனர்

மலாலா வேதனை அமைதிக்கான நோபல் பரிசுபெற்றவர் மலாலா. பாகிஸ்தானில் பெண்கல்விக்காக போராடி தீவிரவாதிகளின் துப்பாக்கிக் கணைகளுக்கு உள்ளாகி, சாவின் விளிம்புவரை சென்று திரும்பிய இவர், சர்வதேச அளவில் பெண் கல்வியை வலியுறுத்தி, பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், லண்டனில் இன்று நடைபெற்ற சர்வதேச கல்வி மாநாட்டில் பங்கேற்று மலாலா பேசுகையில், உலக அளவில் கல்வி முறை தடம்புரண்டுவிட்டதால், 130 கோடி சிறுமிகள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டதாக வேதனை தெரிவித்தார். ஆகையால், அவர்களது எதிர்காலத்தைக் கருத்தில் […]

Read More

இனவெறி கருத்து ஒலிம்பிக் போட்டியில் இருந்து ஜெர்மனி வீரர் வெளியேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் கடந்த புதன்கிழமை ஜெர்மனியை சேர்ந்த சைக்கிளிங் வீரர் பாட்ரிக் மோஸ்டர், ஜெர்மன் தொலைக்காட்சி நிருபரை பார்த்து இனவெறியைத் தூண்டும் விதத்தில் கருத்து தெரிவித்தாராம். இதனால், அவர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். தனது செயலுக்காக அவர் வருத்தம் தெரிவித்து, அதை ஜெர்மனி அணி ஏற்றுக் கொண்டபோதிலும் ஒலிம்பிக் நிர்வாகம் அவரை போட்டியில் அனுமதிக்க மறுத்துவிட்டது.

Read More

50 ஆண்டுகள் கழித்து நூலகத்தில் ஒப்படைக்கப்பட்ட புத்தகம்

லண்டனில் ருசிகரம் லண்டனின் பைஸ்லி சென்ட்ரல் நூலகத்துக்கு சமீபத்தில் தபால் ஒன்று வந்தது. அதை நூலக மேற்பார்வையாளர் பிரித்து பார்த்தபோது, அதில் இந்திய சமையல் குறிப்புகள் குறித்த புத்தகமும், 20 பவுண்ட் கரன்சியும், கூடவே மன்னிப்புக் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அதாவது, கடந்த 1968ஆம் ஆண்டில் இரவலாக வாங்கப்பட்ட அந்த புத்தகத்தை 50 ஆண்டுகள் கழித்து திருப்பி ஒப்படைப்பதால், அதற்காக தன்னை மன்னிக்குமாறும், அபராதமாக 20 பவுண்டை வைத்துக் கொள்ளுமாறும் சூசகமாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல் இணையவெளியில் பகிரப்பட்டு […]

Read More

கார்பரேட் தொழில் அதிபர்களை விமர்சித்ததால் 18 ஆண்டுகள் சிறை

சீனாவின் ஹீபே மாகாணத்தை சேர்ந்தவர் சான் டாவ். 67 வயது வேளாண் சார் தொழில் அதிபரான இவர், கார்பரேட் தொழில் அதிபரை விமர்சித்த குற்றச்சாட்டின்பேரில், 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Read More

ஆப்கானிஸ்தானில் சீனா ஆதிக்கம் செலுத்துவது நல்ல முடிவு

அமெரிக்கா கருத்து ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் தலீபான்கள், சமீபத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். தலீபான்களுக்கு ஆதரவு அளித்த சீனா, ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவும், அந்நாட்டை மறுசீரமைக்கவும் தலீபான்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கருத்து தெரிவித்திருந்தது. இதுகுறித்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க ராணுவ அமைச்சர் அந்தோணி பிளிங்கனிடம் கேட்டபோது, ஆப்கானிஸ்தானில் சீனா ஆதிக்கம் செலுத்துவது நல்ல முடிவு. பேச்சுவார்த்தை மேசைக்கு தலீபான்கள் அமைதியாக வர வேண்டும் என்றார்.

Read More