Category: London Election

டர்ஹாம் கவுண்டி கவுன்சிலில் இழுபறி

    டர்ஹாம் கவுண்டி கவுன்சில் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு இழுபறி ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டு காலமாக இந்த கவுன்சிலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 126 கவுன்சிலர் பதவியிடங்களில், 53 இடங்களை கைப்பற்றியது. அடுத்தபடியாக சுயேச்சை வேட்பாளர்களும், சிறிய கட்சிகளும் இணைந்து 31 இடங்களில் வெற்றிவாகை சூடினர். கன்சர்வேடிவ் கட்சிக்கு 24 இடங்கள் கிடைத்தன. லிபரெல் டெமோக்ரேட்ஸ் கட்சி 17 இடங்களில் தனது இருப்பை பதிவு செய்தது. கவுன்சிலில் ஆட்சியமைப்பதற்கு […]

Read More

கேம்பிரிட்ஜ்ஷிர் மேயர் பதவியை கைப்பற்றியது தொழிலாளர் கட்சி

    கேம்பிரிட்ஜ்ஷிர் மற்றும் பீட்டர்பரோ மேயர் தேர்தலில் 51.3% வாக்குகள் பெற்று தொழிலாளர் கட்சி வேட்பாளர் நிக் ஜான்சன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று நிலவரப்படி 50 சதவீதத்துக்கும் மேல் எந்த வேட்பாளரும் வாக்குகள் பெறவில்லை. இரண்டாம் சுற்று நிலவரப்படி, 51.3% வாக்குகள் பெற்ற நிக் ஜான்சன், நடப்பு மேயரான கன்சர்வேடிவ் கட்சியின் ஜேம்ஸ் பால்மரை வீழ்த்தினார். இந்த வெற்றி தனக்கு வியப்பை அளிப்பதாகக் கூறிய நிக் ஜான்சன், கேம்பிரிட்ஜ்ஷிரின் வளர்ச்சிக்காக சிறப்பான […]

Read More

நிழல் அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு

  பிரிட்டனில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவியதால், எதிர்க்கட்சி பிரமுகர்கள் அடங்கிய நிழல் அமைச்சரவையை மாற்றி அமைக்க அக்கட்சி தலைவர் கெயிர் ஸ்டார்மர் முடிவு செய்திருக்கிறார். முன்னதாக தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் ஏஞ்சலா ரேய்னர் வசமிருந்த தேசிய பிரசாரக்குழு ஒருங்கிணைப்பாளர் பதவியை பறித்ததால், கெயிர் ஸ்டார்மர் உள்கட்சி தலைவர்களின் கண்டனங்களுக்கு உள்ளானார். இந்நிலையில், நிழல் அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ள அவர், இந்த வாரம் முழுவதும் […]

Read More

வெஸ்ட் மிட்லேன்ட்ஸ் மேயர் பதவியை தக்கவைத்துக் கொண்டது கன்சர்வேடிவ் கட்சி

    கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஆன்டி ஸ்ட்ரீட், வெஸ்ட் மிட்லேன்ட் மேயர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். பிரபல ஜான் லீவிஸ் நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநரான அவர், வெஸ்ட் மிட்லேன்ட்ஸ் மேயர் தேர்தலில் 3,14,669 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொழிலாளர் கட்சியின் லியாம் பியர்னி 2,67,626 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பர்மிங்ஹாமில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது பேசிய ஆன்டி ஸ்ட்ரீட், தன் மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கும், பிரசாரத்தின்போது […]

Read More

லண்டனில் 2ஆவது முறையாக அரியணை ஏறுகிறார் சாதிக் கான்

    லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் சாதிக் கான் 2,28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தொடர்ந்து அந்த பதவியை அலங்கரிக்க போகிறார்.   லண்டன் மேயர் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்து தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. இதில், தொழிலாளர் கட்சி வேட்பாளர் சாதிக் கான் 12,06,034 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஷான் பெய்லி 9,77,601 வாக்குகள் பெற்றார். இதனால், […]

Read More

தேர்தல் தோல்வி எதிரொலி தொழிலாளர் கட்சி துணைத் தலைவர் ஏஞ்சலோ ரேய்னரின் பொறுப்புகள் பறிப்பு

    இங்கிலாந்தின் பெரும்பாலான கவுன்சில்களிலும், மேயர் தேர்தலிலும் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்து பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக 47 ஆண்டுகள் அக்கட்சி வசமிருந்த ஹார்டில்பூல் எம்பி தொகுதியை கன்சர்வேடிவ் கட்சியிடம் இழந்தது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தொழிலாளர் துணைத் தலைவர் ஏஞ்சலோ ரேய்னரின் வசமிருந்த தேசிய பிரசாரக் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை கட்சி தலைவர் சர் கெயிர் ஸ்டார்மர் வெளியிட்டார். அதேவேளையில், கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு […]

Read More

லிவர்பூல் நகர மேயர் பதவியை தக்கவைத்துக் கொண்டது தொழிலாளர் கட்சி

  கருப்பின பெண் மேயரானார்   இங்கிலாந்தின் லிவர்பூல் நகர பிராந்திய மேயர் பதவியை தொழிலாளர் கட்சியின் ஸ்டீவ் ரோத்தரம் தக்கவைத்துக் கொண்டார். இத்தொகுதியில் 66,702 வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பை அவர் தட்டிச் சென்றார். இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் 58 சதவீதத்தை அவர் பெற்றிருக்கிறார். இதுகுறித்து ஸ்டீவ் கூறுகையில், அதிகாரப் பரவலுக்கும், நான் இதுவரை லிவர்பூலில் செய்த நற்பணிகளுக்கும் மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இந்த வெற்றி என்றார். இத்தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஜேட் மார்ஸ்டென் 40,211 […]

Read More

தோல்விக்கு கரோனா மீது பழிபோடும் தொழிலாளர் கட்சி!

    இங்கிலாந்தில் ஹார்டில்பூல் எம்பி தொகுதி உருவாக்கப்பட்ட கடந்த 1974ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 47 ஆண்டுகாலமாக அங்கு ஆதிக்கம் செலுத்திவந்த தொழிலாளர் கட்சி, முதன்முறையாக அத்தொகுதியை கன்சர்வேடிவ் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது. இதுமட்டுமன்றி, இன்னும் பிற இடங்களிலும் அக்கட்சி பின்னடைவையே சந்தித்து வருகிறது. இதுகுறித்து அக்கட்சியின் எம்பியும், நிழல் உள்துறை செயலாளருமான நிக் தாமஸ் சைமன்ட்ஸ் கூறுகையில், தொழிலாளர் கட்சி தலைவர் சர் கெயிர் ஸ்டார்மர் தனது குறிக்கோளை நிறைவேற்றுவதில், கரோனா பெருந்தொற்று தடை ஏற்படுத்திவிட்டது. […]

Read More

வேல்ஸ் மாகாணத்தை தக்கவைக்கும் தொழிலாளர் கட்சி

  வேல்ஸ் செனட் சபை தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்றி தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. 52 தொகுதிகளில் இதுவரை தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இதில், தொழிலாளர் கட்சிக்கு அடுத்தபடியாக கன்சர்வேடிவ் கட்சி 12 இடங்களிலும், பிளைய்டு சிம்ரு கட்சி 9 இடங்களிலும், லிபரல் டெமோக்ரேட்ஸ் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதேவேளையில், வேல்ஸ் மாகாணத்தில் தொழிலாளர் கட்சியின் கோட்டையாக கருதப்படும் கில்விட் தொகுதியையும், லிபரல் டெமோக்ரேட்ஸ் கட்சியின் அரணாக கருதப்படும் […]

Read More

‘சாதிக்கும்’ சாதிக் கான்: 25 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

லண்டன் மேயர் தேர்தல்: லண்டன் மேயர் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஷான் பெய்லியை விட தொழிலாளர் கட்சி வேட்பாளர் சாதிக் கான், ஏறத்தாழ 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று இலக்கை நோக்கி விரைந்து பயணிக்கிறார். அதேவேளையில், அரசியல் விமர்சகர்களின் கருத்தை தவிடுபொடியாக்கி, ஷான் பெய்லியும் சாதிக் கானுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக புறநகர் பகுதிகளில் கணிசமான தொகுதிகளில் ஷான் பெய்லி அதிக எண்ணிக்கையில் வாக்கு பெற்றிருக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி […]

Read More

மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் பிரதமர் போரிஸ் ஜான்சன்

    கடந்த 47 ஆண்டுகாலமாக தொழிலாளர் கட்சி வசம் இருந்த ஹார்டில்பூல் தொகுதியை கன்சர்வேடிவ் கட்சி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அக்கட்சியின் ஜில் மோர்டிமர் எம்பி ஆக பதவி ஏற்க இருக்கிறார். அவருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறியது: மாற்றங்களை ஏற்படுத்தும் கட்சியை தான் மக்கள் விரும்புகின்றனர் என்பதை தேர்தல் முடிவு உணர்த்துகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து (பிரெக்ஸிட்) வெளியேறுவதற்காக கடந்த 2019 பொதுத் தேர்தலில் மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்தனர். […]

Read More

தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன் தொழிலாளர் கட்சி தலைவர் கெயிர் ஸ்டார்மர்

  ஹார்டில்பூல் இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் தோல்விக்கு முழுமையாக பொறுப்பேற்பதாக அக்கட்சி தலைவர் கெயிர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். கடந்த 1974ஆம் ஆண்டில் இத்தொகுதி உருவானது முதல் ஏறத்தாழ 50 ஆண்டுகளாக இத்தொகுதியில் தொழிலாளர் கட்சி வெற்றிக் கொடி நாட்டி வந்தது. இந்த நிலையில், முதன்முறையாக தற்போது நடைபெற்ற தேர்தலில் 6,940 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியை பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியிடம் தொழிலாளர் கட்சி இழந்தது. இது தொழிலாளர் கட்சியினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை […]

Read More

டீஸ் பள்ளத்தாக்கை தக்கவைத்துக் கொண்டது போரிஸ் ஜான்சன் கட்சி

    டீஸ் பள்ளத்தாக்கு மேயர் தேர்தலில் 73% வாக்குகளைக் கைப்பற்றி பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அந்த நகரை தக்கவைத்துக் கொண்டது. இதன்மூலம் அக்கட்சியின் பென் ஹுச்சன் மீண்டும் மேயராவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், டீஸ் பள்ளத்தாக்கு மீண்டும் பெருமை கொள்ள போகிறது. இங்கிலாந்தின் ஆளும்கட்சியாக கன்சர்வேடிவ் கட்சி திகழ்வதால், டீஸ் பள்ளத்தாக்கில் நாங்கள் ஏராளமாக செலவு செய்து ஆட்சியைப் பிடித்ததாக கூறுவது தவறு. இந்தப் பகுதியில் நிலவும் […]

Read More

இங்கிலாந்து தேர்தல் பெரும்பாலான இடங்களில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி முன்னிலை

      இங்கிலாந்தில் 143 கவுன்சில்கள், 13 மேயர் பதவிகள், 35 போலீஸ் மற்றும் குற்ற கமிஷனர் பதவியிடங்களுக்கு வியாழக்கிழமை வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கும் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொழிலாளர் கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஹார்டில்பூல் எம்பி தொகுதியில் அக்கட்சி வெற்றிவாய்ப்பை இழந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியிடம் அத்தொகுதியை பறிகொடுத்துள்ளது. இதனால், தொழிலாளர் கட்சி தலைவராக கெயிர் ஸ்டார்மர் நீடிப்பதில் சிக்கல் […]

Read More

லண்டன் மேயர் பதவியை மீண்டும் கைப்பற்றுகிறார் சாதிக் கான்?

    லண்டன் நகர மேயர் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதியம் 1.30 மணி வரையிலான நிலவரப்படி, தொழிலாளர் கட்சி வேட்பாளரும், தற்போதைய மேயருமான சாதிக் கான் 38 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஷான் பெய்லி 37 சதவீத வாக்குகள் பெற்று கடும் போட்டியை உருவாக்கி வருகிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஷான் பெய்லி […]

Read More

ஹார்டில்பூல் தொகுதியில் போரிஸ் ஜான்சன் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

    ஹார்டில்பூல் எம்பி தொகுதி இடைத்தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.   இந்தத் தொகுதியில் தோல்வியை தொழிலாளர் கட்சி ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், வடகிழக்கு நகரான ஹார்டிபூலை கன்சர்வேடிவ் கட்சி கைப்பற்றும்பட்சத்தில், 50 ஆண்டுகள் கழித்து அத்தொகுதியில் முதன்முறையாக வெற்றி பெறும் பெருமையை அக்கட்சி தட்டிச் செல்லும். இதுதவிர எஸ்úஸசின் ஹார்லோ தொகுதி, வார்விக்ஷிரின் […]

Read More

தொடங்கியது பிரமாண்ட தேர்தல்

  பிரதமர் போரிஸ் ஜான்சன் வாக்களித்தார் 2019 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) பிரிட்டனில் நடைபெறும் பிரமாண்ட தேர்தலில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். லண்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். ஸ்காட்லாந்து பாராளுமன்றம், வேல்ஸ் செனட் சபை, இங்கிலாந்தில் லண்டன் உள்பட 13 நகர மேயர் பதவிகள், 143 கவுன்சில்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஹார்டில்பூலில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் எம்பி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை […]

Read More

லண்டனின் அடுத்த மேயர் யார்?

பிரிட்டனில் வியாழக்கிழமை (மே 6) லண்டன் மேயர் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால், இது “சூப்பர் வியாழன்’ என அழைக்கப்படுகிறது. காரணம், இந்த தினத்தில் இங்கிலாந்தில் பெரும்பாலான நகர மேயர்கள், கவுன்சிலர்கள், போலீஸ் மற்றும் குற்ற கமிஷனர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். மேலும், இதே தினத்தில் வேல்ஸ், ஸ்காட்லாந்தில் பாராளுமன்ற தேர்தலும், ஹார்டில்பூல் தொகுதியில் எம்பி பதவியை ஒருவர் ராஜினாமா செய்ததால், அதற்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதுதவிர லண்டனில் 25 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் வாக்காளர்கள் […]

Read More

லண்டன் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல்

தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரம் லண்டன் மேயர் பதவி, 143 ஆங்கில கவுன்சில், 13 உள்ளூர் மேயர் பதவிகள், ஸ்காட்லாந்து பாராளுமன்றம், வேல்ஸ் மாகாண செனட் சபை என பிரிட்டனில் பிரமாண்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (மே 6) நடைபெறுகிறது. இதேபோல், ஹார்ட்டில்பூல் வெஸ்மின்ஸ்ட்ர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடைகிறது. இதில், பெரும்பாலான தேர்தல்கள் கடந்த ஆண்டு நடைபெற இருந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக இந்த […]

Read More