Category: India News

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் 50 சதவீத புதிய எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்

  இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தேர்வாகி சட்டப் பேரவைக்குள் காலடி எடுத்துவைக்கும் புதிய எம்.எல்.ஏ.க்களில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 71%, தமிழகத்தில் 60%, மேற்குவங்கத்தில் 49%, புதுச்சேரியில் 43%, அசாமில் 27% எம்எல்ஏக்கள் மீது குற்றவழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 5 மாநிலங்களிலும் தேர்வான […]

Read More

சர்ச்சை கருத்து நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சர்ச்சைக்கு பெயர்பெற்ற நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் கணக்கில் பிரதமர் நரேந்திர மோடியை மைப்படுத்தி, பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், உங்களது 2000ஆம் ஆண்டைய தலைமைத்துவத்தை பயன்படுத்தி, எதிர்க்கட்சி தலைவர்களை அடக்குமாறு குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி 2000இல் குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அங்கு நிகழ்ந்த வன்முறையைக் குறிப்பிட்டு இந்தக் கருத்தை கங்கனா […]

Read More

வாரணாசியில் கரோனா பரவ காரணம் என்ன?

    இந்தியாவில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் கரோனா பரவல் அதிகமானதால், அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இதனால், அங்கிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வாரணாசி மற்றும் அதை சுற்றியுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில், பேருந்து, லாரிகளில் திரும்ப நேர்ந்தது. இது தவிர வாரணாசியில் மார்ச் 29இல் நடைபெற்ற மத திருவிழாவுக்காகவும், ஏப்ரல் 18இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காகவும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். ஏற்கெனவே கரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென […]

Read More

டெல்லியில் நீடிக்கிறது ஆக்சிஜன் பற்றாக்குறை

  ஒரே நாளில் 407 பேர் சாவு   டெல்லி மருத்துவமனைகளில் உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தொடர்ந்து பற்றாக்குறை நீடிப்பதால், ஒரே நாளில் 407 பேர் கரோனாவுக்கு பலியாக நேர்ந்தது.   டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை ஆக்சிஜன் பற்றாக்குறையால், டாக்டர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், கரோனா நோயாளிகளுக்கான பிராணவாயு வசதியை உறுதிப்படுத்த அவர்களது குடும்பத்தினர் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர்களை பெறுவதற்காக 12 […]

Read More

கோவை தெற்கு தொகுதியில் கமல் அதிர்ச்சி தோல்வி

  கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போராடி தோல்வியைத் தழுவினார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த கமல், மாலை நேரத்துக்குப் பிறகு பின்னடைவை சந்தித்தார். கமல்ஹாசனுக்கு மொத்தம் 51,087 வாக்குகள் கிடைத்து, இரண்டாம் இடம் பெற்றார். அவரது தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலிடம் பெற்ற வானதி சீனிவாசன், 52,526 வாக்குகள் பெற்று, 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை ருசித்தார். காங்கிரஸ் […]

Read More

பாஜகவின் நீட்சி தேர்தல் ஆணையம் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு குற்றச்சாட்டு

பாரதிய ஜனதா கட்சியின் நீட்சி தான் தேர்தல் ஆணையம். அக்கட்சி வெற்றி பெறுவதற்காக தேர்தல் ஆணையம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்றார் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கும் ஐ பேக் நிறுவன உரிமையாளரான அவர், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு தனிப்பட்ட ஆலோசகராக செயல்பட்டுவந்தார். தற்போது மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆங்கில சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த […]

Read More

பாஜகவுக்கு கானல் நீரான மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பதில் முனைப்புடன் செயல்பட்டுவந்த பாஜகவுக்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்திருக்கின்றன. இதனால், அங்கு ஆட்சியை பிடிக்கும் பாஜகவின் திட்டம் கானல் நீராகவே நீடிக்கிறது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகிப்பது மட்டுமன்றி, ஆட்சியையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தொடர்ந்து 3ஆவது முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க போகிறார். அதேவேளையில், அவர் களம் கண்ட நந்திகிராம் தொகுதியில் […]

Read More

கேரளாவில் மீண்டும் அரியணை ஏறுகிறார் பினராயி விஜயன்

கேரளத்தில் இடதுசாரி கட்சி 95 முதல் 100 தொகுதிகள் வரை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. அக்கட்சி தலைவர் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். கேரளாவை பொருத்தவரை கடந்த 40 ஆண்டுகளில் ஒருமுறை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த கட்சி, தொடர்ந்து அடுத்த முறையும் வெற்றி பெற்று அரியணை ஏறியதாக வரலாறு இல்லை. இந்த நிலையை பினராயி விஜயன் தகர்த்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிக் கனியை ருசித்திருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியைத் […]

Read More

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கிறது திமுக

  முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின்   தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதையொட்டி, அவருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் 72.78% வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை […]

Read More

கலைஞரின் தொகுதியில் கலக்கும் திமுக!

மறைந்த திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊர் நாகை மாவட்டம் திருக்குவளையாக இருந்தாலும், அவர் எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது திருவாரூரில்தான். அவரது மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில், திருவாரூரில் திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் போட்டியிட்டு தேர்வானார். தற்போது அதே திருவாரூர் தொகுதியில் மீண்டும் கலைவாணனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் பகல் 1 மணிவரையிலான 10ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை விவரத்தின்படி, […]

Read More

அசாமில் மீண்டும் சோபிக்கும் பாஜக!

வடகிழக்கு மாநிலமான அசாமில் 126 சட்டப் பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. இதில், பகல் 1 மணி வரையிலான நிலவரப்படி, 80 தொகுதிகளை கடந்து பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அந்த மாநில முதல்வர் சர்வானந்த் சோனவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read More

மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையை விஞ்சும் திரிணமூல் காங்கிரஸ்

  மேற்கு வங்கத்தில் 294 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மையைக் கடந்து 202 தொகுதிகளில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி பகல் ஒரு மணி வரையிலான நிலவரப்படி முன்னிலை வகிக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக 88 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சுயேச்சைகள் இரு இடங்களில் முன்னிலை பெறுகின்றனர்.

Read More

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

30 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி, பகல் 1 மணிவரையிலான நிலவரப்படி, 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கடந்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த காங்கிரஸ் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. காரைக்கால், மாஹி, ஏனாம், புதுச்சேரி ஆகிய 4 பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுவையில், பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு ஏறுமுகமாகவே இருக்கிறது.

Read More

140 தொகுதிகளில் முந்துகிறது திமுக

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பகல் ஒரு மணி வரையிலான நிலவரப்படி, திமுக 146 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம்வகிக்கும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரு இடங்களிலும், மதிமுக 3, விசிக 4, கொங்கு மக்கள் தேசிய கழகம் 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மறுமுனையில், அதிமுக கூட்டணி 87 தொகுதிகளில் […]

Read More

அதிமுக அமைச்சர்கள் பின்னடைவு

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவில் அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.   தேனி போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் முதலில் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது மிக குறைவான வாக்கு இடைவெளியில் முன்னிலை பெற்று வருகிறார். அதேவேளையில், அதிமுக அமைச்சர்கள் ஆர். காமராஜ் (நன்னிலம்), மா.பா. பாண்டியராஜன் (ஆவடி), ராஜேந்திர பாலாஜி (ராஜபாளையம்), பெஞ்சமின் (மதுரவாயல்), வெல்லமண்டி நடராஜன் (திருச்சி கிழக்கு), சி.வி. […]

Read More

கோவை தெற்கு தொகுதியில் ஜொலிக்கிறார் கமல்ஹாசன்

    வானதிக்கு பின்னடைவு கோவை தெற்கு தொகுதியை பொருத்தமட்டில் மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் கமல்ஹாசன் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி, 2010 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 1926 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் வானதி சீனிவாசன் 1379 வாக்குகளுடன் பின்னடைவை சந்திக்கிறார்.

Read More

கேரளாவில் இடதுசாரிகள் முன்னிலை

    140 தொகுதிகளை உள்ளடக்கிய கேரளத்தில், இடதுசாரிகள் 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 47 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜக 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

Read More

அஸ்ஸமில் பாஜகவுக்கு ஏறுமுகம்

  126 தொகுதிளை கொண்ட அஸ்ஸம் மாநிலத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவுறது. காலை 9.30 மணி வரையிலான நிலவரப்படி அங்கு பாஜக 46 இடங்களிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

Read More

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை

    30 தொகுதிகளை கொண்ட புதுவை யூனியன் பிரதேசத்தில் 7 தொகுதிகளின் முன்னணி நிலவரம் வெளியாகியிருக்கிறது. இதில், 5 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரசும், 2 தொகுதிகளில் காங்கிரசும் முன்னிலை வகிக்கின்றன.

Read More

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முந்துகிறார் விஜய் வசந்த்

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வசந்தகுமாரின் மறைவைத் தொடர்ந்து, கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுடன் இணைத்து, இதற்கும் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் களமிறங்கினார். அவரை எதிர்த்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில், 9.30 மணி வரையிலான நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிப்பது தெரியவந்துள்ளது.

Read More

மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு பின்னடைவு

    294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில், 106 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங். கட்சி முன்னிலை வகிக்கிறது. பாஜக 97 தொகுதிகளில் முன்னிலை வகித்து, மம்தாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலை வகிக்கிறார். தபால் வாக்குகளின் அடிப்படையிலேயே சுவேந்து அதிகாரி முன்னிலை வகிப்பதாகவும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கணக்கிடும்போது, உண்மை நிலவரம் தெரியவரும் என்றும் திரிணமூல் […]

Read More

தமிழகம்: திமுக தொடர்ந்து முன்னிலை

    234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் தற்போது திமுக கூட்டணி 65 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவை பின்னுக்குத் தள்ளி அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகிக்கிறார். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மயிலாப்பூரில் மநீம வேட்பாளர் ஸ்ரீபிரியா முன்னிலை வகிக்கிறார்.

Read More

டெல்லியில் பொதுமுடக்கம் நீட்டிப்பு

  டெல்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாலும், பொதுமுடக்கத்தை மேலும் ஒரு வாரகாலம் நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மே 10ஆம் தேதி வரை டெல்லியில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுள்ளது. டெல்லிக்கு இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் சப்ளை செய்யப்பட்டிருப்பதாகவும், வரும் திங்கள்கிழமையில் இருந்து 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். பொதுமுடக்கம் […]

Read More

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து: 16 பேர் பலி

  குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் திடீரென நேரிட்ட தீ விபத்தில் 14 நோயாளிகள், இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் என 16 பேர் உடல் கருகி சனிக்கிழமை அதிகாலை பலியாகினர். பரூச் பகுதியில் உள்ள 4 மாடி கட்டட மருத்துவமனையில், 50 கரோனா நோயாளிகள் உள்பட70 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், 14 நோயாளிகள், இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் என 16 பேர் மூச்சுத் […]

Read More

இந்தியாவில் அடுத்தகட்ட தடுப்பூசி திட்டம்

பற்றாக்குறைக்கு மத்தியிலும் தொடக்கம் இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதை செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. ஆனாலும், பெரும்பாலான மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் தடுப்பூசி சப்ளை இல்லாததால், இத்திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதனால் உயிரிழந்துவரும் சூழலில், தடுப்பூசி திட்டம் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரிவுபடுத்தப்பட்டது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோருக்கு இரு தவணை […]

Read More

பிராந்திய அளவிலான பிரச்னைகளுக்கு தீர்வு

மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை கரோனாவுக்கு எதிரான போரில் முதலில் பிராந்திய அளவிலான பிரச்னைக்குத் தீர்வு கண்டு, பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டுமென மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை கூறினார். கரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கரோனா பெருந்தொற்றை நூறாண்டுக்கு ஒருமுறை நேரிடும் பேரிடர் என குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய சூழலை எதிர்கொள்ள அரசின் அனைத்து கரங்களும் இணைந்து […]

Read More

இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பிவைத்தது அமெரிக்கா

  கரோனா இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவில், மருத்துவமனைகளில் பிராணவாயு தட்டுப்பாடு நிலவுவதால், அமெரிக்கா முதல்கட்டமாக அனுப்பிவைத்த 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் டெல்லியை வெள்ளிக்கிழமை வந்தடைந்தன. அமெரிக்காவிலிருந்து சி 5 எம் சூப்பர் கேலக்ஸி என்ற நவீன ரக விமானத்தில் இந்த மருத்துவ உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவின் 70 ஆண்டுகால நட்பு நாடான இந்தியாவுக்கு, கரோனா காலகட்டத்தில் அதை எதிர்கொள்ள அமெரிக்க துணைநிற்கும் என […]

Read More

ஆக்சிஜன் மட்டுமல்ல டெல்லியில் சுடுகாட்டிலும் இடமில்லை

  இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துவரும் கரோனா நோய்த்தொற்றால் தினந்தோறும் பலியாவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், தலைநகர் டெல்லியில் இறந்தவர்களை புதைக்கக் கூட இடமின்றி, தற்காலிக தகனமேடைகளை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தகுந்த இடங்களை அடையாளம் காணுமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் காவல் துறை கேட்டுக் கொண்டது. கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய ரணத்தால், டெல்லியில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இடுகாட்டில் சடலங்களை எரியூட்டுவதற்கு இடமின்றி, கரோனா தாக்கி பலியானவர்களின் உடல்களை நாள் முழுவதும் வரிசையில் […]

Read More

இந்தியாவில் கரோனா உச்சத்துக்கு மத்தியிலும் தேர்தல்!

  இந்தியாவில் கரோனா பரவல் உச்சத்தை அடைந்த போதிலும், மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவை 8ஆம் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் நின்றதால், மேற்கு வங்கம் அடுத்தகட்ட கரோனா பரவலுக்கான மையமாக மாறிவிடுமோ என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் வியாழக்கிழமை 3,79,257 பேருக்கு கரோனா உறுதியானது. சட்டப் பேரவைத் தேர்தலின் இறுதிகட்டத்தை பூர்த்தி செய்யும் […]

Read More

கரோனா கவச உடையுடன் திருமணம் செய்த தம்பதி!

  இந்தியாவில் கரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்தவாறு தம்பதி வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டனர். மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் அவர்களுக்கு ஏப்ரல் 29இல் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில், மணமகனுக்கு திடீரென கரோனா தொற்று ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டதால், திருமணம் தள்ளிவைக்கப்படுவதாக இருந்தது. எனினும் இதை ஏற்க மறுத்த மணமக்கள், கரோனா பாதுகாப்புக் கவச உடை அணிந்தவாறு திருமணம் செய்துகொள்ள முன்வந்தனர். இதற்கு ஆரம்பத்தில் சுகாதாரத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர், அதிகாரிகள் […]

Read More