in

சினிமா கதைபோல கவின் காதலில்….. அடுத்து அடுத்து நடக்கும் ட்விஸ்ட்!!!!


Watch – YouTube Click

சினிமா கதைபோல கவின் காதலில்….. அடுத்து அடுத்து நடக்கும் ட்விஸ்ட்!!!!

சினிமா கதைபோல கவின் காதலில் அடுத்து அடுத்து நடக்கும் ட்விஸ்ட்
நடிகர் கவினுக்கு வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவரின் வருங்கால மனைவி மோனிகா பற்றி ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவி ஒளிபரப்பான பேவரைட் சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. அந்த சீரியலில் வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் கவின். இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்ட கவின் அந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகும் அளவுக்கு பிரபலமாக இருந்தார்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் காதல் மன்னனாகவும் வலம் வந்தார் கவின். அதில் கலந்துகொண்ட சாக்‌ஷி கவினை உருகி உருகி காதலித்தார். ஆனால் கவினோ தான் லாஸ்லியாவை காதலிப்பதாக கூறி சாக்‌ஷிக்கு அதிர்ச்சி கொடுத்தார். தந்தையின் எதிர்ப்பை மீறியும் கவின் உடனான காதலை லாஸ்லியா தொடர்ந்ததால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றெல்லாம் பேச்சி எழ தொடங்கியது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கவின் – லாஸ்லியாவின் காதலும் முடிவுக்கு வந்தது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவினின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது.. இந்நிலையில், அந்த மோனிகா டேவிட், லாஸ்லியாவின் தோழி என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் லாஸ்லியாவிடம் ஸ்டைலிஸ்ட் ஆக பணியாற்றி இருக்கிறாராம்.
லாஸ்லியாவும், மோனிகா டேவிட்டும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் கவின் – லாஸ்லியாவின் காதல் முறிவுக்கு காரணம் என கூறி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

யோகி பாபுவை கேவலப்படுதிய கோவில் அர்ச்சகர்…… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ங்கள்

தனுஷ் பண்ணும் அலப்பறையால்.. தயாரிப்பாளர் தலையில் துண்டு விழும் போல