in

இணைய வழி குற்ற செயல்களில் மீட்கப்பட்ட ரொக்கம் மற்றும் 60 மொபைல் போன்கள் ஒப்படைப்பு

புதுச்சேரியில் இணைய வழி குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 25 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 மொபைல் போன்கள் உரியவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது

புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவில்,பெண்களுக்கு எதிரான குற்றம் என்ற பிரிவின் கீழ் 3 வழக்குகள் உள்பட கடந்த இரண்டு மாதங்களில், 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிரிப்டோ கரன்சி, ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் சூதாட்டம், மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்வதாக கூறி மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட வகைகளில் ரூ.2,83,26,111/-. இழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அதன்படி கடந்த இரண்டு மாதங்களில் 25,65,000 ரொக்கம் மற்றும் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 செல்போன்கள் மீட்கபட்டது.

மீட்கப்பட்ட 25 லட்சத்தி 65 ஆயிரம் ரொக்கம் மற்றும் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 மொபைல் ஃபோன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட புதுச்சேரி டி.ஐ. ஜி.பிரஜேந்திர குமார் இதனை புகார் தரர்களிடம் ஒப்படைத்தார் அவர்களும் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

சைபர் குற்றங்கள் அதிக அளவில் பெருகி வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் மேலும் இணையவழி குற்றங்களில் தொடர்புடைய நபர்களையும் விரைவில் கைது செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் மொபைல் போன்கள் மீட்கப்படும் என்றும் தெரிவித்தார்.

What do you think?

ரசாயன தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி மனு

நில பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடு எதிரொலி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எச்சரிக்கை