வீட்டுக்குள் புகுந்த கார் கியாஸ் கசிந்ததால் பரபரப்பு

 

தெற்கு இங்கிலாந்து, மேற்கு சூசக்ஸில் உள்ள பர்கெஸ் ஹில் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணியளவில் சென்று கொண்டிருந்த வெள்ளை நிற மெர்சிடஸ் கார், திடீரென ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் மோதி, வீட்டுக்குள் புகுந்தது. இதனால், அந்த வீட்டின் சமையலறையில் இருந்து கியாஸ் கசிவு ஏற்படவே, தகவலறிந்து வந்த காவல் துறையினர், கணப் பொழுதில் அப்பகுதி மக்களை வெளியேற்றினர். மொத்தம் 60 வீடுகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கியாஸ் விநியோகமும் நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்வடசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இயல்பு நிலை திரும்பியதும் குடியிருப்புவாசிகள் வீடு திரும்பினர்.

Add your comment

Your email address will not be published.

nine + 18 =