இத்தாலியில் ஏரி அருகே கார் கவிழ்ந்து 12 பேர் பலி

வடக்கு இத்தாலியின் பீட்மோன்ட் பிராந்தியத்தில் ஸ்ட்ரெசா பகுதியில் சிலரை ஏற்றிக் கொண்டு கார் ஒன்று மக்கியோர் ஏரி அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், மலைப்பாங்கான இடத்தில் சென்ற அந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. தகவலறிந்த மீட்பு படையினர் ஹெலிகாப்டரில் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Add your comment

Your email address will not be published.

one × four =