தாயார் டயானா மரணத்தை நினைவூட்டுகிறது ஸ்காட்லாந்து

 

மகன் வில்லியம் உருக்கம்

 

தனது தாயார் டயானா மரணம் உள்பட சோகமான நினைவுகளையும், சில பசுமையான நினைவுகளையும் ஒருசேர ஸ்காட்லாந்து தனக்கு நினைவூட்டுவதாக அதன் சட்டப் பேரவையில், இளவரசர் வில்லியம் சனிக்கிழமை உருக்கமாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது;

ஸ்காட்லாந்தின் பால்மோரலில் உள்ள இளவரசிக்கு சொந்தமான பங்களாவில் நான் இருந்தபோதுதான் எனது தாயாரும், வேல்ஸ் இளவரசியுமான டயானா கார் விபத்தில் இறந்துவிட்டதாக எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. இந்த வேதனையான நினைவுடன், இதே ஸ்காட்லாந்தில்தான் எனது மனைவி கேத்ரீனை முதன்முறையாக சந்தித்தேன். அந்த நினைவுகள் என் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டன.

உங்கள் மனைவியை முதன்முறையாக பார்க்கும் இடத்தை ஒருபோதும் மறக்க முடியாது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த வகையில், ஸ்காட்லாந்து எனக்கு மகிழ்ச்சியையும், துயரத்தையும் ஒருசேர அளிக்கிறது என்றார் இளவரசர் வில்லியம்.

மேலும், ஸ்காட்லாந்தின் பைப் நகரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ பல்கலைக்கழகத்தில் தானும், கேத்ரீனும் பயின்ற நாள்களை வில்லியம் அப்போது நினைவுகூர்ந்து பேசினார்.

Add your comment

Your email address will not be published.

10 + 19 =