மரக் கன்றுகள் நடும் விழாவுடன் தொடங்கியது இளவரசியின் பிளாட்டினம் ஜுபிலி

 

மரக்கன்றுகள் நடும் விழாவுடன் இளவரசி இரண்டாம் எலிசெபத்தின் பிளாட்டினம் ஜூபிலி விழா தொடங்கியது.

இளவரசி இரண்டாம் எலிசெபத்தின் பிளாட்டினம் ஜூபிலி அடுத்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் அனைவரும் மரம் நட வேண்டுமென அரச குடும்பம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த வகையில், இளவரசி வேல்ஸ் இளவரசர் சார்லஸுடன் இணைந்து வின்ஸ்டர் காஸ்டில் அரண்மனையின் முதலாவது மரக் கன்றை நட்டுவைத்து இந்த பிரசாரத்தை தொடங்கினார்.

இதுகுறித்து இளவரசி கூறுகையில், உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு செடியை நட விரும்பும் தனிநபராக நீங்கள் இருந்தாலும் சரி, அல்லது பள்ளியோ, மதவழிபாட்டுத் தலமோ, அல்லது வளாகம்

முழுவதையும் மரத்தால் அலங்கரிக்க விரும்பும் அறக்கட்டளை, வணிக நிறுவனமாக இருந்தாலும் சரி, யார் வேண்டுமானாலும் இந்த பிரசாரத்தில் பங்கெடுக்கலாம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். மேலும், சரியான நிலத்தில் சரியான மரத்தை நட வேண்டியதும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இளவரசியின் இந்த செயல்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரில், நமது மரங்கள் முன்வரிசையில் நிற்கின்றன. மேலும், வருங்கால சந்ததியினருக்கு நமது நாட்டின் பாரம்பரியத்தையும், அழகையும் பறைசாற்றுகின்றன என்றார்.

இளவரசி இரண்டாம் எலிசெபத் தன்னுடை பதவிக்காலத்தில் உலகம் முழுவதும் 1500 மரக்கன்றுகளை நட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

14 − seven =