உயர் ரக வெளிநாட்டு மதுபானங்களை கொண்டு கேக்
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள லே ராயல் பார்க் நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கேக் செய்வதற்கான பழங்கள், உயர் ரக வெளிநாட்டு மதுபானங்களை கொண்டு கேக் கலவை செய்யப்பட்டது.
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள லே ராயல் பார்க் நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கேக் செய்யும் திருவிழா நடைபெற்றது. இதில் 20 கிலோ அளவில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பல்வேறு வகையாக பழங்கள், ஒயின் வகைகள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை கொண்டு கலவையாக கேக் தயாரிக்க ஊரவைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஹோட்டல் நிர்வாக இயக்குனர் சமீர் முகமத், ஹோட்டல் CEO திருஞானம், எக்ஸிக்யூட்டிவ் செப் கோபாலகிருஷ்ணன், சோர்ஸ் செப் சரவணன் மற்றும் அனைத்து ஊழியர்கள், ஹோட்டல் ரூமில் தங்கி இருந்த விருந்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஊறவைத்த கலவையை கொண்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு 60 கிலோவில் கேக் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.