கூண்டில் அடைத்து பறவைகளை வளர்க்க தடை

ஐரோப்பிய நாடுகளில் கூண்டில் அடைத்து கோழி, வாத்து, முயல், குயில் போன்ற பறவைகளை வளர்ப்பதற்குத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியனுக்கு 10 லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் சமூக ஆர்வலர்களிடம் இருந்து அனுப்பப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் சுகாதார ஆணையர் ஸ்டெல்லா கூறுகையில், பறவைகளும் நம்மை போன்ற உயிரினங்கள்தான். எனவே, அவற்றை கூண்டில் அடைத்து நெருக்கமாக வளர்க்க தடை விதிக்கும் சட்டம் அடுத்த ஆண்டு பிறப்பிக்கப்படும். 2027ஆம் ஆண்டுக்குள் இச்சட்டம் அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

Add your comment

Your email address will not be published.

7 − five =