பாலத்தில் மோதிய பேருந்து: பெண் காயம்

 

மேற்கு சூசக்ஸ் பகுதியில் பாலத்தில் பேருந்தின் மேற்கூரை மோதியதால் பெண் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஓட்டுநர் உள்ளிட்ட மேலும் இருவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரைட்டனில் இருந்து ஹோவ் வரை செல்லும் மெட்ரோ பஸ், சாலை பணி காரணமாக செவ்வாய்க்கிழமை மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது. அதன்படி, மேற்கு சூசக்ஸ் ஹேவார்ட்ஸ் ஹீத் பகுதியில் ராக்கி லேனில் உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சென்றபோது அதன் மேல்பகுதியில் பேருந்தின் மேற்கூரை உரசி விபத்துக்குள்ளானது.
இதில், பெண் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல, ஓட்டுநருக்கும், அவரது அருகே அமர்ந்திருந்த மற்றொரு பயணிக்கும் காயம் ஏற்பட்டது. மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது பேருந்தில் 5 பயணிகள் இருந்ததாகவும், இதுபோன்ற விபத்து வருங்காலத்தில் நிகழாதவாறு பார்த்துக் கொள்வதாகவும் பேருந்து நிறுவன மேலாண்மை இயக்குநர் மார்டின் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து உள்ளூர் காவல் துறை விசாரித்து வருகிறது.

Add your comment

Your email address will not be published.

11 − 2 =