அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி

159 பேரை தேடும் பணி தீவீரம்

அமெரிக்காவின் மியாமி நகரில் 40 ஆண்டுகள் பழைமைவாய்ந்த 12 மாடிகளை கொண்ட கட்டடம் கடந்த வியாழக்கிழமை அதிகாலை திடீரென சீட்டுக் கட்டுபோல சரிந்தது. இதனால், அதில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். அபயக் குரல் எழுப்பினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 102 பேரை பத்திரமாக மீட்டனர். 4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இன்னும் 159 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்பு பணியில் தீயணைப்பு படையினர் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

9 + 18 =