பிரிட்டனில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஜெரிமி ஹண்ட் இன்று தாக்கல் செய்கிறார். பிரிட்டனின் வேலை வாய்ப்பு பிரச்சனைக்கு இந்த பட்ஜெட்டில் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர மின்சார கட்டணம், ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு மானியங்கள் இந்த பட்ஜெட் உரையில் இடம் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் லிஸ் ட்ரஸ் பிரதமராக இருந்தபோது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படாததால், அந்த பட்ஜெட் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றார். அவரது தலைமையில் முதலாவது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
ஏற்கனவே தலைசிறந்த பொருளாதார வல்லுனரான ரிஷி சுனக், இந்த பட்ஜெட்டில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார் என்று பலரும் நம்புகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings