இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மே 6ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக முடிசூட்டி கொள்கிறார். இதையொட்டி பக்கிங்ஹாம் அரண்மனை விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. நாள்தோறும் அங்கு அணிவகுப்பு மரியாதை ஒத்திகை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதை காண ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு தினந்தோறும் கூடுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் சந்தேகத்திற்கு இடமாக அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த மர்ம ஆசாமி ஒருவர், திடீரென துப்பாக்கி குண்டு ஒன்றை பக்கிங்ஹாம் அரண்மனையை நோக்கி கையால் வீசினார்.
இதை அறிந்த பாதுகாவல் அதிகாரிகள் உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் சந்தேகத்திற்கு இடமான ஆயுதங்கள் ஏதேனும் இருக்கிறதா என போலீசார் சோதனை நடத்தினர். அதே சமயம் அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை விசாரணையில் தெரிய வந்தது.
பக்கிங்ஹாம் அரண்மனையை நோக்கி மர்ம நபர் துப்பாக்கி தோட்டாக்களை வீசிய போதிலும், அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த அணிவகுப்பு ஒத்திகையில் எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings