இங்கிலாந்தில் ஆகஸ்ட் 16க்கு பின் சுய தனிமை தேவையில்லை

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவீத் பாராளுமன்றத்தில் இன்று எம்.பி.க்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவரது உரையின் சிறப்பம்சம் வருமாறு:

ஏற்கனவே கொரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தாலும், இருடோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குப் பின்னர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.

கோவிட் பாசிடிவ் என ரிசல்ட் வந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், அவர்களாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் பாராளுமன்றத்தில் பேசினார்.

முன்னதாக, இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதும், பாதிப்பின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கு மேல் பதிவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கல்வித்துறை அமைச்சர் கவின் வில்லியம்சன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், கோவிட் பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தாலும், ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குப் பின்னர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

இங்கிலாந்தில் இறுதிகட்ட தளர்வுகள் வரும் 19ஆம் தேதி நடைமுறைக்கு வருகின்றன. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் 12ஆம் தேதி வெளியாகும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.

Add your comment

Your email address will not be published.

five × three =