சரணாலயத்தில் கரடிகள் சுட்டுக்கொலை

 

இங்கிலாந்தின் டன்ஸ்டாபிள் விப்ஸ்னடே சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு பிரவுன் கரடிகள் வெள்ளிக்கிழமை தங்கள் கூண்டிலிருந்து வெளியேறி, மற்ற விலங்குகளுக்கும், சரணாலய ஊழியர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தன. மேலும், சூறைக்காற்றின் சீற்றத்தால் அங்கு விழுந்த கிடந்த மரக்கிளையை பயன்படுத்தி, சரணாலயத்திலிருந்து வெளியேறி உள்ளூர் பொதுமக்களுக்கும் கரடிகள் ஆபத்தை விளைவித்தன. விபரீதத்தை உணர்ந்த சரணாலய அலுவலர்கள், அந்தக் கரடிகள் இரண்டையும் சுட்டுக் கொன்றனர். கருணையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்ததாக சரணாலய அலுவலர்கள் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

four × 3 =