பிரிட்டனில் கோடை காலத்தில் கரோனா முற்றாக ஒழியும்

 

 

பிரிட்டனில் கோடை முடிவதற்குள் கரோனா முற்றிலும் ஒழியும் என்றார் தடுப்பூசி திட்ட முன்னாள் தலைவர் கிளிவ் டிக்ஸ்.

அவர் மேலும் கூறுகையில், பிரிட்டனில் ஆகஸ்ட் மாதத்துக்குள் கரோனா வைரஸ் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்று நான் திடமாக நம்புகிறேன். புலனாகக் கூடிய அனைத்து தீநுண்மி தொற்றுகளிலிருந்தும் மக்களை நாம் பாதுகாத்துவிட்டோம். அடுத்து வரவிருக்கும் குளிர்காலத்தில் நாம் பாதுகாப்பாக இருப்போம் என்றார் அவர். கடந்த டிசம்பரில் தடுப்பூசி திட்ட தலைவராக பொறுப்பேற்ற இவர், கடந்த வாரம் அந்த பொறுப்பிலிருந்து விலகினார்.

Add your comment

Your email address will not be published.

18 + 17 =