in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் | Britain Tamil Europe News UK News


Watch – YouTube Click

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள்

சவுத் அம்ப்டான் பகுதியில் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சவுத் அம்ப்டான் பகுதியில் பிறந்தவர் ஆவார். நேற்று தீபாவளியை அவர்

சவுத் அம்ப்டான் பகுதியில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடினார். முன்னதாக அங்கு பகுதியில் உள்ள ஹிந்து கோவிலில் அவர் மனைவியுடன் சென்று ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார். மேலும் அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்து மேலும் இசைப்பதை பார்வையிட்டு கண்டுகளித்தார்.

அவருடன் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் இரண்டு மகள்களும் வந்திருந்தனர்.

52 பிளாட் உரிமையாளருக்கு 43 ஆயிரம் பவுண்ட் வரி விதித்த கவுன்சில்

இங்கிலாந்தில் பொதுவாக சொந்தமாக பிளாட் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 800 பவுண்டு வரை வரி விதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் மிட்டல்ஸ்பாரோ பகுதியில் 52 பிளாட் வைத்திருக்கும் ஒருவருக்கு 43 ஆயிரம் பவுண்டு வரி விதிக்கப்பட்டது.

இந்த பிளாட்டுகளில் ஏராளமான மாணவர்கள் தங்கி இருக்கின்றனர். இதனால் அவருக்கு ஏராளமான வருவாய் கிடைக்கிறது.

அதேசமயம் தனக்கு 43 ஆயிரம் பவுண்டு வரி விதித்ததை அவர் கண்டித்தார். இதற்கு விளக்கம் அளித்துள்ள சம்பந்தப்பட்ட கவுன்சில் நிர்வாகம், சட்ட வரையறைக்கு உட்பட்டு தான் அவருக்கு இவ்வளவு தொகை வரி விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 145 பேர் கைது

லண்டனில் நடைபெறும் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்துக்கு போலீசார் பொறுப்பு ஏற்பர் என பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்தார். பிரிட்டனில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் சமீபத்தில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில், வரும் நவம்பர் 11}ஆம் தேதி மீண்டும் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்துக்கு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். எனவே இதில் வன்முறை வெடிக்காமல் போலீசார் பொறுப்பு ஏற்பர் என பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார்.

இருப்பினும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. எனவே இதில் தொடர்புடைய 145 பேர் கைது செய்யப்பட்டனர். ஏழு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பலத்த புயல்

இங்கிலாந்தின் வடக்கு பகுதியிலும் வேல்ஸ் நாட்டின் ஒரு சில பகுதிகளும் இன்று காலை Debi என்ற பெயரில் புதிய புயல் வீசியது. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இந்த புயலால் பொருட்கள் பறந்து சென்றதை காண முடிந்தது. மேலும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் இந்த புயலால் சேதம் அடைந்தன. திடீர் புயல் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இங்கிலாந்தில் சமீப நாட்களாக வீசிய புயலில் இது நான்காவது புயல் ஆகும்.

இங்கிலாந்தில் வெளிநாட்டு டாக்டர்களின் தேவை அதிகரிப்பு

இங்கிலாந்தில் 3 இல் 2 பங்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இருந்தாலும் இங்கிலாந்தில் உள்நாட்டு மக்களுக்கு பயிற்சி அளிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

எனவே நிகழாண்டில் இங்கிலாந்தை சேர்ந்த பூர்வ குடி மக்களுக்கு மருத்துவ பயிற்சி அதிக அளவில் அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் வெளிநாட்டு மருத்துவர்கள் தேவை நாலுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டன் உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்

இங்கிலாந்தில் கடந்த வாரம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்ற வலதுசாரி அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஷூவெல்லா பிராவர்மேன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே இந்த விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தலையிட்டு உள்துறை அமைச்சர் ஷூவெல்லா பிராவர்மேன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் ஷூவெல்லா பிராவர்மேன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது லண்டன் போலீசார் பாரபட்ச முறையில் நடந்து கொண்டதாக அவர் ஒரு நாளிதழில் கட்டுரை எழுதினார்.

இது மேலும் அனலை பரப்பியதால் ஷூவல்லா பிராவர்மென் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.


Watch – YouTube Click

What do you think?

யார் இந்த டேவிட் கேமரூன்?

தீவிபத்து தொழிற்சாலை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்