in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் | 08.11.2023 | Britain Tamil Europe News UK News

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள்

இங்கிலாந்து எதிர்க்கட்சி தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து லேபர் கட்சியில் இருந்து மூத்த தலைவர் ராஜினாமா

இங்கிலாந்தின் எதிர்கட்சித் தலைவர் ஸ்டார்மர் காசா போர் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இதற்காக அவரை லேபர் கட்சியில் மூத்த தலைவர்கள் சாதிக் கான், ஆண்டி பண்ஹாம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ஸ்டார்மறை எதிர்க்கட்சி தலைவர பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் குரல் கொடுத்தனர். அதே சமயம் கட்சியில் ஒரு சில எம்பிக்கள் ஸ்டார்மருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டார்மர் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என லேபர் கட்சியை சேர்ந்த பர்னிலே கவுன்சில் தலைவர் அன்வர் மற்றும் பென்டில்வாரோ கவுன்சில் தலைவர் அஜ்ஜத் முகமது ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்டார்மரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
பர்ன்லே கவுன்சில் தலைவர் மற்றும் 10 கவுன்சிலர்கள் லேபர் கட்சியிலிருந்து விலகினர். இது அந்தக் கட்சி தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாமருக்கு எதிர்ப்பு தெரிவித்து லேபர் கட்சியில் இருந்து அதன் மூத்த தலைவரும் நிழல் அமைச்சருமான இம்ரான் ஹுசைன் இன்று பதவியை ராஜினாமா செய்தார்.

இங்கிலாந்தில் பல் டாக்டர்களின் பற்றாக்குறையால் வாய்ப்புற்று நோய் ஏற்பட்டு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இங்கிலாந்தில் பல் டாக்டர் களின் பற்றாக்குறையால் வாய் போட்டு நோய் ஏற்பட்டு மரணமடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் வாய்ப்புற்று நோயால் 2077 பலியாகினர். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் வாய்ப்புற்று நோய்க்கு 3000க்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர்.

மேலும் வாய்ப்புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதில்  மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை முக்கிய காரணம் ஆகும்.

எனவே இங்கிலாந்து மருத்துவமனைகளில் பல் மருத்துவர்கள் போதிய அளவில் பணியமர்த்த வேண்டும் என்பதே பொதுமக்களில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நைட்ரஸ் ஆக்சைடு வைத்திருந்தால் இரண்டு ஆண்டுகள் சிறை

இங்கிலாந்தில் நைட்ரஸ் ஆக்சைடு எனப்படும் லாபிங் கேஸ் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி இதை வைத்திருந்தால் அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நைட்ரஸ் ஆக்சைடு மீது தடை விதிக்கப்படுகிறது.

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் யூத எதிர்ப்பு பிரச்சாரத்தால் மாணவர்கள் கவலை

இங்கிலாந்தில் முன்னே எப்போதும் இல்லாத அளவுக்கு பல்கலைக்கழகங்களில் யூத எதிர்ப்பு பிரசாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இது தங்களுக்கு மிகப்பெரிய அளவில் கவலை ஏற்படுத்துவதாக யூத மாணவர்கள் யூனியன் தலைவர் எட்வர்ட் ஈஷாக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் நவம்பர் மூன்றாம் தேதி வரை 67 யூத எதிர்ப்பு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவே கடந்த ஆண்டில் வரும் 12 ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளி அருகே சிறுவனுக்கு கத்திக்குத்து மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

இங்கிலாந்தின் வெஸ்ட் yorkshire லீட்ஸ் பகுதியில் பள்ளி அருகே சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனுக்கு நேற்று கத்தி குத்து விழுந்தது.

இதனால் அக்கம்பக்கத்தினர் அந்த சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சம்பவம் நடைபெற்ற பிரைமரி ஸ்கூலில் தான் அந்த சிறுவன் ஏற்கனவே படித்திருக்கிறான்.

போலீஸ் விசாரணையில் அந்த செயல்பாடுகளை நண்பர் தான் அவனை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.

சம்பந்தப்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புயலில் சிக்கிய கப்பல்

இங்கிலாந்து சேர்ந்த ஸ்பிரிட் ஆஃப் டிஸ்கவரி என்ற சொகுசு கப்பல் bay of biscay கடற் பகுதியில் சென்று கொண்டிருந்தது. இப்போது திடீரென கடலில் பலத்த புயல் வீசியதால் அலையில் அந்த கப்பல் அங்கும் இங்குமாக தள்ளாடியது.

இதனால் கப்பலில் இருந்த பயணிகள் பீதியில் உறைந்து போனார்கள். மேலும் கப்பல் கடலில் மூழ்கி விடுமோ என்று பயணிகள் மரண ஓலம் எழுப்பினர். இந்த காட்சிகளை ஒரு சில பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பினர்.

தற்போது கடலில் அலையும் வேகம் குறைந்து விட்டதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

இங்கிலாந்தில் இ சிகரெட் மீது கூடுதல் வரி விதிக்க முடிவு

இங்கிலாந்தில் எலக்ட்ரிக் சிகரெட் மீது கூடுதல் வரி விதிக்க முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே மன்னர் சார்லஸ் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உறையின்போது கூறினார்.

இதேபோல ஃப்ரூட் பிலேவர்ஸ் பயன்பாட்டிற்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் பொதுமக்களை கடித்த நாய் சுட்டுக்கொலை

இங்கிலாந்தில் காலிஃபாக்ஸ் பகுதியில் பொதுமக்கள் சிலரை நாய் ஒன்று கடித்து குதறியது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சத்துடனே அந்தப் பகுதியை கடந்து சென்றனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த நாயை உயிருடன் பிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தனர்.

ஆனாலும் அந்த நாய் போலீசாரின் பிடிக்கு செவி சாய்க்கவில்லை. இதனால் பொறுமை இழந்த போலீசார் அந்த நாயை சுட்டுக் கொல்லப் முடிவு செய்தனர்.

அதன்படி போலீசார் துப்பாக்கியால் சுட்டு ஒரு நாயை கொலை செய்தனர். இதற்கிடையே நாய் கடியால் பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What do you think?

ரீமேக் ஆகும் அஜித்தின் படம்..

ஐஸ்வர்யா அர்ஜுன் உமாபதிக்கு ராயல் வெட்டிங் போல நடைபெற்ற நிச்சயதார்த்தம்….ஈவென்ட் மேனேஜர் அசத்தல்