இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பிவைத்தது பிரிட்டன்

 

கரோனா நோய்த் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு, 600 மருத்துவ உபகரணங்களை 9 விமான கன்டெய்னர் வாயிலாக பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைத்தது. இது செவ்வாய்க்கிழமை காலை இந்திய தலைநகர் டெல்லியை சென்றடைகிறது.
இந்தியாவில் மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தினந்தோறும் ஏராளமானோர் பலியாகி வருவதால், காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் 495 கருவிகளை இந்தியாவுக்கு பிரிட்டன் அனுப்பிவைத்துள்ளது. இந்தியாவுக்கு இந்த இக்கட்டான தருணத்தில் துணைநிற்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 4ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சுமார் 3,50,000 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் சப்ளைக்கு உத்தரவாதம் அளிக்க முடியாததால், டெல்லியில் ஏராளமான மருத்துவமனைகள் புதிய நோயாளிகளை ஏற்க மறுக்கின்றன. அங்கு ஆக்சிஜன் டேங்கர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் அனுப்பிவைக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

11 − 4 =