பிரிட்டனில் வரி உயர்வு

 

பாராளுமன்றத்தில் இளவரசி உரை

 

பிரிட்டனில் கரோனாவுக்கு பிந்தைய நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, வரி வீதம் உயர்த்தப்படுவதாக பாராளுமன்றத்தில் இளவரசி இரண்டாம் எலிசபெத் தெரிவித்தார்.

 

நிகழாண்டு பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், இளவரசி அறிமுக உரையாற்றி பேசுகையில், “”பெரிய, லாபமீட்டும் நிறுவனங்களை போல், பொதுமக்களும் அரசின் கணக்கை சமன்செய்ய தங்களால் இயன்ற பங்களிப்பை நல்க வேண்டும். பொருளாதார மீட்பு பாதுகாப்பான இலக்கை அடைந்ததும், பொது நிதி நீடித்த பாதையை எட்டியது என்கிற நிலைமையை எனது அரசு உறுதிப்படுத்தும்” என்றார் இளவரசி.

இளவரசி பேசுவதற்கு முன்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிமுக உரை நிகழ்த்தினார். அதில், அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடருக்கான 29 மசோதாக்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், பிரிட்டனின் பொருளாதார பாதையை சீரமைப்பதற்கான அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்த போதிலும், வரி உயர்வு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

 

பிரதமரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

மக்களின் வாழ்நாள் முழுவதும் உயர் தர கல்வி மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில், புதிய வாழ்நாள் திறன் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கூடுதல் முதலீடு செய்து பிரிட்டனை அறிவியல் சூப்பர்பவர் நாடாக மாற்றுவது;

ரயில் மற்றும் பேருந்து சேவைகளின் ஓர் அங்கமாக, ஸ்காட்லாந்து விடுதலை குரலுக்கு எதிராக ஐக்கிய இணைப்பு மறுஆய்வு திட்டத்தை செயல்படுத்துவது;

சொந்த வீடு வைத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வீட்டு வாடகையை நியாயமாக நெறிமுறைப்படுத்துவது;

கரோனா பெருந்தொற்றால் எந்தவொரு குழந்தையும் கல்வி வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்துவது என ஏராளமான அம்சங்கள் பிரதமரின் உரையில் இடம்பெற்றிருந்தன.

Add your comment

Your email address will not be published.

5 × five =