பிரிட்டன் செய்திகள் சில வரிகளில்…

* பச்சைப் பட்டியலில் மேலும் சில நாடுகளை சேர்த்து, சர்வதேச விமான பயணங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென பிரிட்டன் அரசை சுற்றுலா நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

* கோடை காலத்தின் எஞ்சிய காலகட்டத்தில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பாக இதைக் கருதும் சுற்றுலா நிறுவனத்தினர், இதன்மூலம் சுற்றுலா வருவாய் பெருகுவது மட்டுமன்றி, வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்படும் என கூறுகின்றனர்.

* பச்சை, மஞ்சள், சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளை ஒவ்வொரு 3 வாரத்துக்கு ஒருமுறை பிரிட்டன் அரசு மேற்பார்வையிடுவதாகவும், அதன்படி அடுத்தடுத்த நாள்களில் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

* மஞ்சள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளிலிருந்து பிரிட்டன் வரும் மக்கள், இருடோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால், அவர்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அமைச்சரவை ஆலோசனை நடத்தி வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மேத்யூ ஹான்காக் தெரிவித்தார்.

* பிரிட்டனில் கோவிட் தொற்றுக்கு எதிராக லிவர்மெக்டின் எனும் மருந்து வேலை செய்யுமா என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

* பிரிட்டனில் நேற்றைய நிலவரப்படி மேலும் 11,625 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. 27 பேர் உயிரிழந்தனர்.

* பிரிட்டனில் 81 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சுமார் 60 சதவீதத்தினர் இருடோஸ் தடுப்பூசி செலுத்தி, கோவிட் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை பெற்றிருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

4 + one =