வியட்நாமை மிரட்டும் இந்திய- பிரிட்டன் வகை உருமாறிய கரோனா

 

வியட்நாம் நாட்டில் இந்திய- பிரிட்டன் வகை கரோனாவின் உருமாறிய கூட்டுக்கலவை கண்டறியப்பட்டிருப்பதாகவும், இது காற்றில் எளிதில் பரவக்கூடியது என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே தென்பட்ட கரோனா வைரசை விட இந்த வகை வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் நிகுயனன் தன்லாங் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வைரசின் மரபணு குறியீடு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

18 + fourteen =