பிரிட்டன் பயணிகளை அனுமதியுங்கள்

ஐரோப்பிய யூனியனிடம் வேண்டுகோள்

கோடை விடுமுறையையொட்டி, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா வரும் இருடோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரிட்டன் பயணிகளுக்கு ஐரோப்பிய யூனியன் மடைதிறந்த வெள்ளம் போல் அனுமதியளிக்க வேண்டுமென பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியனிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக பிரிட்டன் வர்த்தகத் துறை அமைச்சர் குவாசி குவார்டெங் தெரிவித்தார்.

இதனிடையே, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் இருந்து பிரிட்டன் வரும் இருடோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று கூறிய அமைச்சர், இதற்கான நெறிமுறைகள் வரும் 26ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.

Add your comment

Your email address will not be published.

16 + nine =