அமெரிக்காவில் இந்திய வம்சாவளி உணவக உரிமையாளரிடம் லஞ்ச வேட்டை

 

அரசியல்வாதிக்கு 20 ஆண்டுகள் சிறை

 

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி உணவக உரிமையாளரிடம் லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட ரிபப்ளிக் கட்சி பிரமுகருக்கும், அவரது மனைவிக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

நியூயார்க்கை அடுத்த நசாவ் கவுண்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் எட்வர்டு மேங்கனோ. இவர் நகர்மன்றத் தலைவராக கடந்த 2009இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில், நசாவ் பகுதியில் உணவகம் நடத்திவந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹரேந்திர சிங் என்பவர், தான் 20 மில்லியன் டாலர் வங்கிக் கடன் பெறுவதற்கும், சிறைச்சாலைகளுக்கு உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற உதவுமாறும் கோரி, எட்வர்டை அணுகினார்.

இதற்கு பிரதிபலனாக எட்வர்டு லஞ்சம் கேட்டார். அந்த வகையில், 7,500 டாலர் மதிப்பிலான கைக்கடிகாரம், உயர் ரக இருக்கை, குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள், எட்வர்டின் வீட்டை சீரமைப்பதற்கான செலவு ஆகியவற்றை ஹரேந்திர சிங் ஏற்றுக் கொண்டார். பின்னர், தொடர்ந்து லஞ்சம் கேட்டு எட்வர்டு நச்சரித்ததால், இதுதொடர்பாக பெடரல் நீதிமன்றத்தில் ஹரேந்திர சிங் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையைக் கேட்டறிந்த நீதிபதி, விசாரணை நிறைவில் எட்வர்டு மேங்கனோவுக்கும், அவர் லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி லிண்டாவுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Add your comment

Your email address will not be published.

nine + 6 =