வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட தம்பிக்காக பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுவன்

இங்கிலாந்தின் செஷீர், ஃபார்ன்டன் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தாமஸ் பிரவுன், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தனது கைப்பட எழுதிய கடிதத்தில், தனது தம்பி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சைக்காக மாதம் 800 பவுண்ட் செலவழிக்க நேரிடுவதால், தங்கள் குடும்பத்துக்கு நிதிச்சுமை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, வறுமையை நோக்கி தள்ளப்படும் தங்கள் குடும்பத்துக்கு மருத்துவ செலவுக்காக நிவாரணம் அளிக்குமாறு அந்தக் கடிதத்தில் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

twenty + 4 =