பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து

மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்

மட்சூட் பார்க் அருகே பார்சனோஜ் தெருவில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில், மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் 13 வயது சிறுவர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்த காவல் துறையினர், ஏர் ஆம்புலன்ஸ் வாயிலாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸôர் வழக்குப் பதிவு செய்து 15 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அந்த மாணவர் ஜார்ஜ் கிரீன் பள்ளியில் படித்து வந்தது தெரியவந்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

10 − 5 =