பிரிட்டனைச் சேர்ந்த டேபரோ ஜேம்ஸ் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் சாவதற்கு சில நாட்களுக்கு முன்பாக கேன்சர் ஆராய்ச்சி செய்வது குறித்து ஒரு அமைப்பை தொடங்கினார். அதற்காக பலரிடமும் அவர் நிதி உதவி பெற்று வந்தார்.
அந்த நிறுவனம் அவர் இறந்த பின்னரும் மும்முரமாக செயல்பட்டு வந்தது. அந்த வகையில் அந்த அமைப்பு தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே இதுவரை ஒரு கோடியே 13 லட்சம் பவுண்டு நிதி திரட்டி இருப்பது தெரியவந்துள்ளது. பிரிட்டன் மன்னர் சார்லஸ், அரசி கமிலா சார்லசும் இந்த அமைப்புக்கு நிதி உதவி அளித்திருக்கின்றனர்.
அதிலும் இந்த அமைப்பு தொடங்கப்பட்ட ஒரு வாரத்திலேயே 30 லட்சத்து ஐம்பதாயிரம் பவுண்ட் நிதி உதவி திரட்டியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த அமைப்பு தொடங்கப்பட்ட போது வெறும் 2 லட்சத்து ஐம்பதாயிரம் பவுண்ட் மட்டுமே நிதி திரட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு தொடங்கப்பட்டது.
ஆனால் அதைக் காட்டிலும் பல மடங்கு அந்த அமைப்பு நிதி திரட்டி சாதனை படைத்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings