இணையத்தில் பரவும் போரிஸ் ஜான்சன் மொபைல் எண்

 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தனிப்பட்ட மொபைல் எண் இணையத்தில் தாராளமாக பரவி வருகிறது. இதனால், அவருக்கு தினந்தோறும் எண்ணற்ற அழைப்புகள் வந்து தொல்லை கொடுப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு செய்திக் குறிப்பு ஒன்றுடன் வெளியான அந்த மொபைல் எண்ணை பிரதமர் இத்தனை ஆண்டுகளாகியும் மாற்றவில்லை. அண்மையில், மொபைல் போனை பயன்படுத்தியதற்காகவும் பிரதமர் மீது விமர்சனம் எழுந்தது. அதாவது, கரோனா பெருந்தொற்றின் ஆரம்பத்தில் தொழிலதிபர் ஜேம்ஸ் டைசனுக்கு பிரதமர் மெசேஜ் அனுப்பி, அவரது நிறுவன ஊழியர்கள் இங்கிலாந்தில் நீண்ட நாள்கள் தங்கியிருந்து, தேசிய சுகாதார சேவைகள் ஆணையத்துக்கான வென்டிலேட்டர் உற்பத்தியில் ஈடுபடும் வகையில், அவர்களுக்கான வரிவிதிப்பு முறையில் சாதகமாக நடந்துகொள்வதாக பிரதமர் உறுதியளித்ததாக கூறப்பட்டது. இதற்கு விளக்கமளித்த பிரதமர், வென்டிலேட்டர் சப்ளையை அதிகரிக்கவே தான் இவ்வாறு நடந்துகொண்டதாகவும், இதில் விதிமீறல் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தொழிலாளர் கட்சி தலைவர் கெயில் ஸ்டார்மர், பிரதமரின் மொபைல் எண்ணை பெற்றுக் கொண்ட நண்பர்கள், அவரை தொடர்புகொண்டு வரிவிதிப்பு முறையில் மாற்றம் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டது தவறு என்றார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் பிரதமரின் தனிப்பட்ட மொபைல் எண் இணையத்தில் காட்டுத்தீயை போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Add your comment

Your email address will not be published.

3 × three =