இங்கிலாந்து தேர்தல் பெரும்பாலான இடங்களில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி முன்னிலை

 

 

 

இங்கிலாந்தில் 143 கவுன்சில்கள், 13 மேயர் பதவிகள், 35 போலீஸ் மற்றும் குற்ற கமிஷனர் பதவியிடங்களுக்கு வியாழக்கிழமை வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கும் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொழிலாளர் கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஹார்டில்பூல் எம்பி தொகுதியில் அக்கட்சி வெற்றிவாய்ப்பை இழந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியிடம் அத்தொகுதியை பறிகொடுத்துள்ளது. இதனால், தொழிலாளர் கட்சி தலைவராக கெயிர் ஸ்டார்மர் நீடிப்பதில் சிக்கல் உருவெடுத்துள்ளது. அக்கட்சிக்குள்ளேயே உள்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்திருக்கிறது.

இதுதவிர நார்த் அம்பர்லேன்ட், டூட்லி, நுனிட்டன், பெட்வொர்த் ஆகிய கவுன்சில்களிலும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளது. இது மட்டுமன்றி, தொழிலாளர் கட்சியின் பாரம்பரிய தொகுதியாக கருதப்படும் ஹார்லோ தொகுதியிலும், கன்சர்வேடிவ் கட்சி தடம் பதித்து, அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.

 

தேர்தல் முடிவுகள் உள்ளபடியே ஊக்கம் அளிப்பதாக கூறிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஓர் அரசாக, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, எங்களால் முடிந்த அளவுக்கு பெந்தொற்று காலத்தில் செயல்பட்டு, இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுத்தமைக்காக கிடைத்த வெற்றி இது என்று தெரிவித்தார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி, லிபரல் டெமோக்ரேட்ஸ் கட்சியும், கிரீன் கட்சியும் கணிசமான எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றன.

Add your comment

Your email address will not be published.

3 × 5 =