ஹார்டில்பூல் தொகுதியில் போரிஸ் ஜான்சன் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

 

 

ஹார்டில்பூல் எம்பி தொகுதி இடைத்தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்தத் தொகுதியில் தோல்வியை தொழிலாளர் கட்சி ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், வடகிழக்கு நகரான ஹார்டிபூலை கன்சர்வேடிவ் கட்சி கைப்பற்றும்பட்சத்தில், 50 ஆண்டுகள் கழித்து அத்தொகுதியில் முதன்முறையாக வெற்றி பெறும் பெருமையை அக்கட்சி தட்டிச் செல்லும். இதுதவிர எஸ்úஸசின் ஹார்லோ தொகுதி, வார்விக்ஷிரின் நுனிடோன், பெட்வோர்த் ஆகிய முக்கிய கவுன்சில்களிலும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று தொழிலாளர் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க போவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதன்மூலம் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செல்வாக்கு பெருகும் என்றும், தொழிலாளர் கட்சி தலைவர் சர் கெயிரின் தலைமைப் பண்பு மீது கேள்வி எழுந்து அவர் அக்கட்சி தலைவர் பதவியில் நீடிப்பது குறித்து விவாதங்கள் எழலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add your comment

Your email address will not be published.

twenty − 2 =