பிரிட்டன் அமைச்சர் எதிர்ப்பு
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தந்தை ஸ்டான்லி பேட்ரிக் ஜான்சன். ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான இவருக்கு நைட் ஹூட் விருது வழங்க போரிஸ் ஜான்சன் பரிந்துரை செய்தார். முன்னாள் பிரதமர் என்ற முறையில் போரிஸ் ஜான்சன் சிபாரிசு செய்தார். இதற்கு பிரிட்டன் அமைச்சர் ராபர்ட் ஜெனரிக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர்கள் நைட்ஹுட் விருதை தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவது தவறு. ஆகையால் போரிஸ் ஜான்சன் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ராபர்ட் ஜெனரிக் கேட்டுக் கொண்டார். அத்துடன் விருது பட்டியலில் இந்த ஆண்டு 50 பேர் மட்டுமே உள்ளதாகவும், கடந்த ஆண்டில் 100 பேர் இந்த லிஸ்டில் இருந்ததாகவும் ராபர்ட் ஜெனரிக் தெரிவித்தார்.
அதாவது போரிஸ் ஜான்சன் தனது செல்வாக்கை பயன்படுத்தி போட்டியாளர்களின் எண்ணிக்கை சரிபாதியாக குறைத்து விட்டதாக ராபர்ட் ஜெனரிக் கூறினார்.
GIPHY App Key not set. Please check settings