மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் பிரதமர் போரிஸ் ஜான்சன்

 

 

கடந்த 47 ஆண்டுகாலமாக தொழிலாளர் கட்சி வசம் இருந்த ஹார்டில்பூல் தொகுதியை கன்சர்வேடிவ் கட்சி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அக்கட்சியின் ஜில் மோர்டிமர் எம்பி ஆக பதவி ஏற்க இருக்கிறார்.

அவருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறியது:

மாற்றங்களை ஏற்படுத்தும் கட்சியை தான் மக்கள் விரும்புகின்றனர் என்பதை தேர்தல் முடிவு உணர்த்துகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து (பிரெக்ஸிட்) வெளியேறுவதற்காக கடந்த 2019 பொதுத் தேர்தலில் மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்தனர். அதேபோல், இப்போது மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஹார்டில்பூல் தொகுதியில் எங்களுக்கு வாக்களித்திருக்கின்றனர் என்றார்.

இத்தொகுதியில் வெற்றி பெற்ற ஜில் மோர்டிமர் கூறுகையில், தொழிலாளர் கட்சி இத்தனை ஆண்டுகளாக பொதுமக்களை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தியது. பொதுமக்களின் வீட்டு வாசல் படி ஏறி, வாக்கு கேட்க சென்றபோது இதை நான் அனுபவரீதியாக உணர்ந்தேன் என்றார்.

Add your comment

Your email address will not be published.

seventeen + 19 =