பிரதமர் போரிஸ் ஜான்சன்- கேரி ரகசிய திருமணம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், அவரது நீண்டநாள் காதலியுமான கேரி சைமண்ட்சும் ரகசியமான முறையில் திருமணம் செய்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

56 வயது போரிஸ் ஜான்சனும், 33 வயது கேரியும் நீண்டநாள் காதலர்கள். இருவரும் ஜோடியாக பொதுவெளியில் தோன்றினாலும் திருமணம் செய்துகொள்ளாமல் நாட்களை கடத்தினர். இந்நிலையில் தங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நிறைவடைந்துவிட்டதாகவும், கேரி கரப்பமாக இருப்பதாகவும் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன்பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரலில் இத்தம்பதிக்கு வில்பிரட் என்னும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னரும் திருமணம்செய்துகொள்ளாமல் நாட்களை கடத்திய இத்தம்பதி, தற்போது திருமணம் செய்துகொண்டனர்.

Add your comment

Your email address will not be published.

three × 4 =