விண்வெளிக்கு பறக்கிறார் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஷ்

லகின் கோடீஸ்வரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவன உரிமையாளருமான ஜெப் பெசோஷ் அடுத்த சில மணிநேரங்களில் விண்வெளிக்கு பறக்கிறார். சிறுவயதில் இருந்தே விண்வெளிக்கு செல்வதை இலக்காக கொண்ட அவர், இதற்காக கடந்த 2000ஆம் ஆண்டில் ப்ளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தை தொடங்கி, நியூ ஷெப்பர்டு என்ற விமானத்தை பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறார்.

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் பகுதியில் இருந்து உள்ளூர் நேரப்படி, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு இந்த விமானம் விண்வெளியை நோக்கி புறப்படுகிறது. அமேசான் அதிபருடன் அவரது சகோதரர் மார்க் பெசோஷ், 82 வயது வேல்லி பங்க் மற்றும் 18 வயது கல்லூரி மாணவர் ஆகியோரும் பறக்கின்றனர்.

விமானம் புறப்படுவதற்கு முன்பாக அதன் ஆயத்தப் பணிகள் அனைத்தும் ப்ளூ ஆரிஜின் நிறுவன வெப்சைட்டில் (https://www.blueorigin.com/) 90 நிமிடங்களுக்கு முன்பாக நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. மனிதன் விண்வெளிக்கு சென்று வந்த 52-ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, இந்த தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அமேசான் அதிபர் ஜெப் பெசோஷிடம் பேட்டி கண்ட நிருபர்கள், விண்வெளிக்கு பிரயாணம் ஆகும் நீங்கள், பதற்றமாக உணர்கிறீர்களா என்று கேட்டதற்கு, நான் பதற்றப்படவில்லை. மாறாக ஆர்வமுடன் இருக்கிறேன். விண்வெளிக்குச் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்காக பயிற்சி பெற்றிருக்கிறோம் என்றார் கூலாக.

Add your comment

Your email address will not be published.

20 + ten =