கருப்பு பூஞ்சை நோய்: பிரதமர் மோடி எச்சரிக்கை

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள முன்களப் பணியாளர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார். அப்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துவரும் கருப்பு பூஞ்சை நோயால், நமது சவால் அதிகரித்திருப்பதாகக் கூறிய அவர், கரோனாவுக்கு எதிரான போரில் தற்போது கருப்பு பூஞ்சையும் சேர்ந்துகொண்டதாக எச்சரிக்கை விடுத்தார்.

எனவே, இதனை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முன்களப் பணியாளர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, டெல்லியில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இதுவரை 197 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை 2,59,551 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 4,209 பேர் பலியாகினர். அதிகபட்சமாக தமிழகத்தில் 35,571 பேரும், கேரளத்தில் 30,491 பேரும் கரோனா தொற்றுக்குள்ளாகினர்.

Add your comment

Your email address will not be published.

15 − four =