மருத்துவமனைக்கு திருப்பிவிடப்படும் தொழிற்சாலை ஆக்சிஜன்

கருப்பூ பூஞ்சை தாக்குதல்

இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் பிராணவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன், மருத்துவமனைகளுக்கு திருப்பிவிடப்படுகிறது. அத்துடன், தொழிற்சாலை சிலிண்டர்களும் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொழிற்சாலை சிலிண்டர்கள், மருத்துவ தரத்தினாலான சிலிண்டர்களாக தரம் உயர்த்தப்பட்டாலும், மருத்து தேவை அல்லாத சிலிண்டர்கள், நோயாளிகளுக்கு எப்போதும் பயனளிக்கும் என்று கூற இயலாது.
மேலும், மருத்துவ ஆக்சிஜனை விட தொழிற்சாலை ஆக்சிஜன் 99.67% தூய்மையாக இருந்த போதிலும், மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டருக்கு நிகரான கண்டிஷனை அது கொண்டிருக்காது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழில்சார் ஆக்சிஜன் சிலிண்டரை கடுமையாகவும், சுகாதாரமின்றியும் பயன்படுத்த நேரிடுவதாகவும், அவற்றில் சிறு சிறு துளைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

five + twelve =