துயரத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம்

 

காதலி உள்பட 6 பேரை சுட்டுக் கொன்ற இளைஞர்

விழாவுக்கு தன்னை அழைக்காததால் வெறிச்செயல்

 

அமெரிக்காவின் கொலரடோ நகரைச் சேர்ந்தவர் மேசியாஸ் (வயது 28). இவரது காதலி சாண்ட்ரா பரஸ் (28) குடும்ப உறுப்பினர் ஒருவரின் பிறந்த நாள் விழா கடந்த சனிக்கிழமை காண்டர்பரியில் உள்ள மொபைல் ஹோம் பார்க்கில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், மேசியாசுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையொட்டி, விழா நடைபெறும் ஹாலுக்கு இரவு 10 மணியளவில் சென்ற மேசியாஸ், விரக்தியின் விளிம்பில் தான் கொண்டு வந்த கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட தொடங்கினார்.

இதில், அவரது காதலி சாண்ட்ரா பரஸ் உள்பட 6 பேர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2, 5, 11 வயது குழந்தைகள் மூவர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக்கான சட்டப்பூர்வ உரிமம் மேசியாசிடம் கிடையாது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால், அவர் மீது கொலை வழக்கு மட்டுமன்றி, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த பிரிவின்கீழும் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.

கொலரடேவை நடுங்கச் செய்த இந்த சம்பவம் குறித்து அதன் ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில், இது மிகவும் பயங்கரவாத செயல். நாம் அனைவரையும் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அன்னையர் தினத்தன்று இந்த சம்பவம் நடைபெற்றது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

18 − 3 =