பாலியல் வழக்கில் கைதான 83 வயது அமெரிக்க காமெடி நடிகர் விடுதலை

அமெரிக்காவின் பிரபல காமெடி நடிகர் பில் காஸ்பி, முன்னாள் கைப்பந்து வீராங்கனை ஆன்ட்ரியா கான்ஸ்டேன்டை மானபங்கம் செய்த வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு பிலடெல்பியா சிறையில் அடைக்கப்பட்டார். மீ டு என்ற ஹேஷ்டேக்கின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை ஆன்ட்ரியா கான்úஸடன்ட் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இந்த வழக்கில், 83 வயது நடிகர் பில்காஸ்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பென்னிசில்வேனியா உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ் கோர்ட்டில் உரிய விதிகளை அரசு தரப்பு வக்கீல் பின்பற்றவில்லை எனக் கூறி, பில் காஸ்பியை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

Add your comment

Your email address will not be published.

13 − seven =