கோவிட் செய்திகளை வெளியிடுவதில் பாரபட்சம்

பிரிட்டன் அரசின் மீது குற்றச்சாட்டு

கோவிட் தொடர்பான செய்திகளை வெளியிடும் பிரிட்டன் அரசு, அதை காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், சைன் எனப்படும் சைகை மொழியிலும் வெளியிடாமல் மாற்றுத் திறனாளிகளை அவமதிப்பதாக மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் குற்றம்சாட்டினார். லீட்ஸ் நகரை சேர்ந்த 36 வயது கேத்ரீன் என்ற மாற்றுத்திறனாளி இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்மூலம் சமத்துவ சட்டத்தை பிரிட்டன் அரசு மீறிவிட்டதாக கூறிய அவர், அரசின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

nineteen − three =