ஐரோப்பிய நாடான ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளத்தில் சமீபத்தில் பெண் ஒருவர் மேலாடை இன்றி சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் மேலாடை இன்றி குளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நீச்சல் குள நிர்வாகிகள் அந்த பெண்ணை தூக்கி வெளியே வீசினர்.
இதேபோல கடந்த ஆண்டு டிசம்பரில் பெர்லினில் உள்ள மற்றொரு பொது நீச்சல் குளத்தில் வேறொரு பெண் மேலாடை இன்றி உல்லாசமாக குளித்து கொண்டிருந்தார். அவரையும் நீச்சல் குள நிர்வாகிகள் வெளியேற்றினர். இந்த இரண்டு சம்பவம் பெர்லினில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கும் சென்றது.
இந்த நிலையில் பெண்கள் மேல் ஆடை இன்றி குளிப்பதற்கு நகர நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பெண்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆண்களைப் போல நாங்களும் மேலாடையை அவிழ்த்து போட்டு ஆனந்த குளியல் போடுவோம் என்று பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
GIPHY App Key not set. Please check settings