நாளை மதுபான விடுதிகள் திறப்பு

 

மதுபானங்களுக்கு தட்டுப்பாடு

 

மதுபான விடுதிகளின் உள்அரங்குகள் நாளை (திங்கள்கிழமை) திறக்கப்படும் சூழலில், மதுபானங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது மது பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டனில் கரோனா பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு வரும் சூழலில், 5 மாதங்களுக்குப் பின்னர் மதுபானக் கூடங்களின் உள்பகுதியும் வாடிக்கையாளர்களுக்கு திங்கள்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. இதனால், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான விடுதிகள் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுகின்றன. ஏற்கெனவே, கடந்த ஏப்ரலில் மதுபான விடுதிகளின் வெளி பகுதியை மது விநியோகத்துக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், 40 சதவீத மதுபான விடுதிகளில், வெளிப்புற வசதி இல்லாததால், அவை திறக்கப்படாமல் இருந்தன.

இந்தச் சூழலில், பொது முடக்கம் தளர்வு காரணமாக திங்கள்கிழமை முதல் அவை திறக்கப்படுகின்றன. இந்நிலையில், குறிப்பிட்ட சில மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக அதன் உற்பத்தியை அதிகரிக்குமாறு அந்த நிறுவன உரிமையாளரிடம் மதுபான விடுதி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்திருப்பதுடன், தற்போது இருப்பில் இருக்கும் மது வகைகளையும் சில கட்டுப்பாடுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

two × 2 =