கர்ப்பமானார் இளவரசி பேட்ரிஸ்

 

 

இளவரசி பேட்ரிஸ் கர்ப்பமாக இருப்பதாகவும், இலையுதிர் காலத்தில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.

 

அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி பேட்ரிஸýக்கும், எடோர்டு மாப்பள்ளி மோஸிக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வின்ஸ்டரில் உள்ள ஆல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அதே ஆண்டு மே 29இல் பிரமாண்டமாக நடைபெற இருந்த இந்தத் திருமணம், கரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில், இளவரசி பேட்ரிஸ் கர்ப்பமாக இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டு, அதில் அத்தம்பதி திருமணத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. வரும் இலையுதிர் காலத்தில் இளவரசிக்கு பிரசவம் நடக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசியின் இந்தக் குழந்தை மன்னராட்சியின் 12ஆவது கொள்ளுப் பேர பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

twelve + 10 =