கரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தில், அதன் 3ஆம் அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் பாதுகாப்பு வழிமுறைகளை கைவிட கூடாது என்றும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் பொதுமுடக்கம் கடுமையாக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், சொந்த மக்களை கட்டுப்படுத்துவதை விட மோசமானது வேறு ஏதுமில்லை என்றும் கூறினார்.

இதுதவிர, மகாராஷ்டிரத்தில் இதுவரை 3,000 பேருக்கு கருப்பு பூஞ்சை தாக்குதல் கண்டறியப்பட்டிருப்பதாகவும், இதனை எதிர்த்து தீவிரமாக போராடிவருவதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

12 − 8 =