ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பி. லிடியா தோர்ப். இவருக்கு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில்பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி எம்பி தோர்ப் கண்ணீர் மல்க கூறும்போது,’ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நான் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டேன். ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல. மாடிப்படியில் நடந்து வர முடியவில்லை. அப்போது தகாத இடத்தில் என்னை தொட்டார்கள்.
சக்தி வாய்ந்த மனிதர்கள் இதை செய்தார்கள். செனட்டர் டேவிட் வான் தவறாக நடந்து கொண்டார். அலுவலக வாசலுக்கு வெளியே நடக்க நான் பயந்தேன். நான் கதவை லேசாகத் திறந்து வெளியே செல்வதற்கு முன் அங்கு யாரும் இல்லையா என்பதை உறுதி செய்து விட்டுதான் செல்வேன். ஏனெனில் நான் இந்த கட்டிடத்திற்குள் செல்லும் போதெல்லாம் என்னை யாராவது ஒருவர் தொல்லை கொடுத்தபடி இருந்தனர். இதேபோன்று பல பெண்களுக்கும் நடந்துள்ளது. அவர்கள் தங்கள் பதவிக்காக வெளியே சொல்ல மறுக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
லிபரல் கட்சியைச் சேர்ந்த செனட்டர் டேவிட் வான் இந்த குற்றச்சாட்டுகளை உண்மையில்லை என மறுத்துள்ளார். இதனால் தாம் மனதளவில் நொறுங்கி விட்டதாக தெரிவித்தார். ஆனால் இந்த விவகாரத்தில் டேவிட் வான்னை கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது.