ஆகஸ் ஒப்பந்தம் அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும்

வடகொரியா கண்டனம்

இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளை அளிக்க அமெரிக்காவும், பிரிட்டனும் அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஆகஸ் ஒப்பந்தத்தை சீனாவும், பிரான்சும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில், ஆகஸ் ஒப்பந்தம் இப்பிராந்தியத்தில் அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கருத்து தெரிவித்துள்ளார்.