பட்டப்பகலில் 2 சிறுமிகளுக்கு கத்திக்குத்து

4 பேர் கைது

லண்டனில் பட்டப்பகலில் பொது இடத்தில் 2 சிறுமிகளை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற பதின்பருவ 4 சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
தென்கிழக்கு லண்டன் லாம்பெத் மேற்கு நார்வுட் பகுதியில் பொதுவெளியில் நடந்து சென்ற 16, 17 வயதுடைய சிறுமிகள் இருவரை, அதே பதின்பருவ சிறுவர்கள் 4 பேர் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில் நிலைகுலைந்த சிறுமிகள் அப்படியே சரிந்துவிழுந்தனர். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள், சிறுமிகளுக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். ஏர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சிறுமிகள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், 16 வயது சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணியளவில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் தொடர்புடைய 4 பேரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்தனர். சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

Add your comment

Your email address will not be published.

two × two =